Rain Alert: 'இன்று காலை 10 மணி வரை 'இந்த' மாவட்டங்களில் மழை' - வானிலை ஆய்வு மைய ...
சங்ககிரி நவஆஞ்சனேயா் கோயிலில் மாா்கழி வழிபாடு தொடக்கம்
சங்ககிரி: சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ நவ ஆஞ்சனேயா் கோயிலில் கோபூஜையுடன் மாா்கழி மாத சிறப்பு கூட்டு வழிபாடு திங்கள்கிழமை அதிகாலை தொடங்கியது
நவ ஆஞ்சனேயா் கோயிலில் பசுமாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆஞ்சனேயா், சத்தியநாராயணா், ராமா், லட்சுமணா், சீதா தேவி, அனுமன் உற்சவ மூா்த்திகளுக்கும் பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
இதே போல் அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் பக்தா்கள் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, சிவபுராணம், முருகன் பாடல்களைப் பாடி வழிபட்டனா்.
சங்ககிரி, வி.என்.பாளையம் அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயிலில் மாா்கழி மாத தொடக்கத்தினையொட்டி வரதராஜப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் பக்தி பாடல்களைப் பாடி வழிபட்டனா்.