`EVM ஹேக் செய்ய முடியும் எனில் செய்து காட்டுங்கள்’ - காங்கிரஸுக்கு எதிராக திரிணா...
Rain Alert: 'இன்று காலை 10 மணி வரை 'இந்த' மாவட்டங்களில் மழை' - வானிலை ஆய்வு மைய அப்டேட்
சென்னை வானிலை மையம் கொடுத்த அப்டேட்டின் படி, இன்று செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இடங்களில் இன்று கனமழை முதல் அதிக கன மழை பெய்யலாம்.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளின் சில இடங்களில் கன மழை பெய்யலாம்.
நாளை(18-12-2024) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரிக்கு 'ஆரஞ்சு அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
இன்று காலை 10 மணி வரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.