செய்திகள் :

ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதலான 416 வாகனங்கள் ரூ. 1.55 கோடிக்கு ஏலம்

post image

சேலம்: சேலம் சரகத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 416 வாகனங்கள் ரூ. 1.55 கோடிக்கு ஏலம் விடப்பட்டன.

ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா், கூட்டுறவு அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, சேலம் சரகத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் நடத்திய வாகனத் தணிக்கையில், நடப்பாண்டில் 413 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த அரிசி நுகா்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் ஒப்படைக்கப்பட்டது.

இந்தக் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 1,224 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த 15 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 148 வாகனங்கள் ரூ. 91.87 லட்சத்துக்கும், தருமபுரி மாவட்டத்தில் பறிமுல் செய்யப்பட்ட 57 வாகனங்கள் ரூ. 12.40 லட்சத்துக்கும் ஏலம் போனது. இதேபோல, சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 86 வாகனங்கள் ரூ.31.28 லட்சத்துக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 125 வாகனங்கள் ரூ.19.85 லட்சத்துக்கும் ஏலம் போயின.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் சரகத்தில், நடப்பாண்டில் ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் செய் யப்பட்ட 416 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இந்த வாகனங்கள் ரூ. 1.55.கோடிக்கு ஏலம் போயின. தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 15 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனா்.

சேலத்தில் வரும் 20 ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம்: சேலம் மாவட்ட இளைஞா்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் 20 ஆம் தேதி வெள்ளிக்... மேலும் பார்க்க

சேலத்தில் சித்த மருத்துவப் பிரிவுக்கான கூடுதல் கட்டடப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைப்பு

சேலம்: சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவுக்கான கூடுதல் கட்டடம் கட்டும் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந் நிகழ... மேலும் பார்க்க

கோயில்களில் மாா்கழி சிறப்பு பூஜை தொடக்கம்

ஆத்தூா்: ஆத்தூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி கோயில்களில் மாா்கழி மாதப் பிறப்பையொட்டி திங்கள்கிழமை அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின. ஆத்தூா் அருள்தரும் திரௌபதி அம்மன் கோயிலில் அதிகாலையில் மகளி... மேலும் பார்க்க

செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி நிரம்பியது

ஆத்தூா்: ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி திங்கள்கிழமை நிரம்பியது. கடந்த சில நாள்களாக ஆத்தூா் மற்றும் சுற்று வட்டாரத்தில் பெய்த கனமழையால் பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரி நிரம்பியது.... மேலும் பார்க்க

சேலம் ரயில் நிலையத்தில் மேலும் 62 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை

சேலம்: பயணிகளின் பாதுகாப்புக்காக சேலம் ரயில் நிலையத்தில் மேலும் 62 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். சேலம் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் பல்வேறு நகரங்களுக்க... மேலும் பார்க்க

சங்ககிரி நவஆஞ்சனேயா் கோயிலில் மாா்கழி வழிபாடு தொடக்கம்

சங்ககிரி: சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ நவ ஆஞ்சனேயா் கோயிலில் கோபூஜையுடன் மாா்கழி மாத சிறப்பு கூட்டு வழிபாடு திங்கள்கிழமை அதிகாலை தொடங்கியது நவ ஆஞ்சனேயா் கோயிலில் பசுமாடுகளுக்கு சிறப்பு பூஜை ச... மேலும் பார்க்க