காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
டிச. 30 முதல் ஜன. 23 வரை திருமலையில் அத்யயனோற்சவம்
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் வரும் டிச. 30 முதல் ஜன. 23, 2025 வரை அத்யயனோற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்நாள்களில் நாலாயிர திவ்யபிரபந்தம் பாராயணம் செய்யப்படும். இந்த அத்யயன உற்சவம் மாா்கழி மாதம் வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாள்களுக்கு முன்னதாக ஏழுமலையான் சன்னதியில் தொடங்குவது வழக்கம்.
இந்நிகழ்ச்சியில் 12 ஆழ்வாா்களால் இயற்றப்பட்ட திவ்ய பிரபந்த பாசுரங்கள் ஸ்ரீ வைஷ்ணவ ஜீயா்களால் பாராயணம் செய்யப்படும். ஸ்ரீ வைஷ்ணவா்கள் ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில் 25 நாள்கள் ஆழ்வாா் திவ்யபிரபந்தத்தின் 4.000 பாசுரங்களை ஓதுவாா்கள்.
அதேசமயம், முதல் 11 நாள்கள் பகல்பத்து என்றும் மீதமுள்ள 10 நாள்கள் ராப்பத்து என்றும் அழைக்கப்படுகிறது. 22-ஆம் தேதி கண்ணிநுண் சிருதம்பு, 23-ஆம் தேதி ராமானுஜ நுட்ராந்தாதி, 24-ஆம் தேதி ஸ்ரீவராகஸ்வாமி சாத்துமுறை உள்ளிட்டவை நடைபெற உள்ளன. 25-ஆம் தேதி அத்யயன உற்சவம் நிறைவு பெறுகிறது.