மோகன்லாலின் பரோஸ் திரைப்பட ஓவியப் போட்டி!
மோகன்லாலின் பரோஸ் திரைப்பட ஓவியப்போட்டியில் வெற்றி பெறுவர்களுக்கு 4 டிஜிட்டல் டேப்லெட்டுகள் வழங்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
மலையாளத்தில் 40 ஆண்டுகள் நடிகராக இருக்கும் மோகன்லால், மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய ஜிஜோவின் கதையை பரோஸ் என்ற படத்தை இயக்கியதன்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இதில் ஸ்பானிஷ் நட்சத்திரங்கள் பாஸ் வேகா, ரஃபேல் அமர்கோ போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள இதில் மீரா ஜாஸ்மின், குருசோமசுந்தரம் நடித்துள்ளார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் லிடியன். குழந்தைகளுக்கான படமென்பதால் லிடியனைத் தேர்வு செய்துள்ளார் மோகன்லால்.
இந்த நிலையில் படக்குழு கூறியதாவது:
பரோஸ் படத்தின் முக்கிய இரண்டு கதாப்பாத்திரங்களான பரோஸ், வூடூ ஆகிய இருவரின் உருவங்களை தங்கள் கற்பனையில் வரைந்து, #BarrozArtContestTN எனும் ஹேஷ்டேக்குடன் இணைத்து, சமூக வலைத்தள பக்கத்தில் பகிர வேண்டும்.
இதில் 6 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
பரிசு: போட்டியில் வெல்லும் 6 முதல் 11 வயது வரையிலான 4 குழந்தைகளுக்கு பரிசாக 4 டிஜிட்டல் டேப்லெட்டும் 12 வயது முதல் 15 வயது வரையிலான 4 குழந்தைகளுக்கு 4 டிஜிட்டல் டேப்லெட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி இறுதி நாள் : 31.12.2024
வெற்றியாளர் அறிவிப்பு : 1-1-2025