செய்திகள் :

பாட்டல் ராதா வெளியீட்டுத் தேதி!

post image

குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள பாட்டல் ராதா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கியவர், தொடர்ந்து இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜே பேபி, தண்டகாரண்யம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

இதையும் படிக்க: சூரி படத்தில் ஸ்வாசிகா!

தற்போது, பா. இரஞ்சித் தன் இணை இயக்குநரான தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்தை தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்திற்கு, ‘பாட்டல் ராதா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நாயகனாக குரு சோமசுந்தரமும், இவருக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜனும் முக்கிய கதாபாத்திரங்களில் பாரி இளவழகன் (ஜமா), ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மதுப்பழக்கத்தால் சீரழியும் நாயகனின் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி!

இயக்குநர் அட்லி தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் அட்லி ஜவான் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக, ம... மேலும் பார்க்க

ராமேஸ்வர கேங்ஸ்டர் கதையில் கார்த்தி!

நடிகர் கார்த்தி கேங்ஸ்டர் பின்னணி கதையில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படம் ஜனவரி வெ... மேலும் பார்க்க

சூரி படத்தில் ஸ்வாசிகா!

நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஸ்வாசிகா இணைந்துள்ளார்.நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்... மேலும் பார்க்க

யோகமான நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.18-12-2024 புதன் கிழமைமேஷம்:இன்று பணவரத்து திருப்திகரமாக இருப்பதுடன் செல்வாக்கும் உயர... மேலும் பார்க்க

2025 நவம்பரில் இந்தியாவில் உலக குத்துச்சண்டை இறுதிப் போட்டி

வரும் 2025 நவம்பா் மாதம் இந்தியாவில் உலக குத்துச்சண்டை இறுதிப் போட்டி (ஃபைனல்ஸ்) மற்றும் உலக குத்துச்சண்டை சம்மேளன மாநாடு நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் (பிஎஃப்ஐ) தலைவா் அஜய... மேலும் பார்க்க

பாக்ஸ் ஆபிஸ் வெற்றி ரகசியம் பகிர்ந்த அட்லீ!

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து பின்னர் நடிகர் விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி.ஹிந்தியில் ஷாருக்கானை இயக்கிய ஜவான் திரைப்படம் ரூ.1000கோடிக்கும் அதிகமாக வசூலித்... மேலும் பார்க்க