செய்திகள் :

Ambedkar: ``டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த பாவங்கள்..!" - பட்டியலிடும் பிரதமர் மோடி

post image

அமித் ஷாபேச்சு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் பெயரை முன்வைத்து காங்கிரஸைச் சாடியிருப்பது தற்போது பெரும் விவாதமாக வெடித்திருக்கிறது.

நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில், ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரைக் காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சிதான். ஆனால், அவரின் உண்மையான உணர்வுகள் குறித்தும் பேச வேண்டும்." என அமித் ஷா பேசியிருந்தார்.

ராகுல் காந்தி - அம்பேத்கர் - அமித் ஷா

ராகுல் காந்தி விமர்சனம்...

இதற்கு எதிர்வினையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``மனுஸ்மிருதியை நம்புபவர்கள் கண்டிப்பாக அம்பேத்கருடன் முரண்படுவதில் ஆச்சர்யமில்லை." எனச் சாடினார்.

அவரைத்தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ``அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும், அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

``டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ்...'' - பிரதமர் மோடி

இந்த நிலையில், அமித் ஷா பேசியது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி விளக்கமளித்திருக்கிறார். அந்தப் பதிவில், ``காங்கிரஸ் தங்களின் தவறுகளையும், டாக்டர் அம்பேத்கரை அவமதித்ததையும் பொய்களால் மறைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கரின் லெகஸியை அழிக்கவும், SC/ST சமூகங்களை அவமானப்படுத்தவும், ஒற்றை வம்சத்தின் தலைமையில் ஒரு கட்சி எப்படி எல்லாவிதமான கேடுகெட்ட செயல்களிலும் ஈடுபட்டது என்பதை இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார்கள்.

மோடி

டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த பாவங்கள்... காங்கிரஸ் அம்பேத்கரை இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தது. நேரு அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்து தனது தோல்வியைக் கௌரவப் பிரச்னையாக மாற்றினார். அம்பேத்கருக்குப் பாரத ரத்னா விருதை மறுத்தது. நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் அவரின் உருவபடத்தை மறுத்தனர். காங்கிரஸின் ஆட்சியில் SC/ST சமூகங்களுக்கு எதிரான மிக மோசமான படுகொலைகள் நடந்துள்ளன என்பதை அவர்களால் மறுக்க முடியாது. பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதிலும், SC, ST சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க எந்தவொரு விஷயத்தையும் செய்யவில்லை.

அம்பேத்கரை அவமதித்த, SC/ST சமூகங்களைப் புறக்கணித்த காங்கிரஸின் இருண்ட வரலாற்றை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பலப்படுத்தினார். அவர் முன்வைத்த உண்மைகளால் காங்கிரஸ் திகைத்துவிட்து. அதனால்தான், இப்போது நாடகங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், மக்களுக்கு உண்மை தெரியும். நாம் என்னவாக இருக்கிறோம் என்பதற்கு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரே காரணம்!

கடந்த 10 ஆண்டுகளாக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நமது அரசு அயராது உழைத்திருக்கிறது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து அகற்றுதல், SC/ST சட்டத்தை வலுப்படுத்துவது, ஸ்வச் பாரத், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், உஜ்வாலா யோஜனா போன்ற நமது அரசின் முதன்மைத் திட்டங்கள் ஒவ்வொன்றும் ஏழை மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வைத் தொட்டவை. டாக்டர் அம்பேத்கருடன் தொடர்புடைய ஐந்து முக்கிய இடங்களான பஞ்சதீர்த்தை மேம்படுத்த எங்கள் அரசு பாடுபட்டுள்ளது.

அம்பேத்கர்

பல தசாப்தங்களாக சைத்ய பூமிக்கான (Chaitya Bhoomi) நிலம் தொடர்பான பிரச்னை நிலுவையில் இருந்தது. எங்கள் அரசு இந்தப் பிரச்னையைத் தீர்த்தது மட்டுமல்லாமல், நான் அங்கு பிரார்த்தனை செய்யச் சென்றேன். டாக்டர் அம்பேத்கர் தனது கடைசி காலங்களைக் கழித்த டெல்லியில் உள்ள 26, அலிபூர் சாலையையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். லண்டனில் அவர் வசித்த வீடும் அரசால் வாங்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் மீது எங்களின் மரியாதையும் முழுமையானது." என்று மோடி தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

``விஜய் மல்லையா சொத்தை விற்றதில் வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி திரும்பியது'' - நிர்மலா சீதாராமன்

தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமையோடு நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டும், கேள்வி எழுப்பப்பட்டும் வருகிறது.... மேலும் பார்க்க

``தன்னை இளைஞர் என்று சொல்லும் 54 வயதான தலைவர்.." - நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேச்சு!

நடந்துவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் விவாதம் நடந்தது. அப்போது ராஜ்யசபாவில் பேசிய அமித் ஷா, ``அரசியலமைப்பு ஒருபோதும் மாறாதது என்றெல்லாம் கருதப்படவில்லை. அரசியலமை... மேலும் பார்க்க

Ambedkar: ``அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது" -அமித்ஷாவின் விமர்சனம்; காங்கிரஸ் பதில்!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பது. 269 வாக்குகள் பெற்றதால், இந்த மசோதா நாடாளுமன்றக் கூ... மேலும் பார்க்க

Doctor Vikatan: நாக்கைப் பிளப்பது, eye tattoo; ஜென் Z-ன் அலங்கார மோகம்... ஆபத்தை அறிவார்களா?

Doctor Vikatan: திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் நடத்தி வந்த டாட்டூ ஸ்டூடியோவில், நண்பருக்கு நாக்கைப் பிளவுபடுத்தும் சிகிச்சையைச் செய்ததாகவும் கண்களுக்குள் டாட்டூ போட்டுவிட்டதாகவும்செய்தி வந்த... மேலும் பார்க்க

Health: தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

முக்கனியில் ஒன்றான வாழையில் எண்ணிலடங்காத சத்துகள் உள்ளன. வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் செரிமானம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஓர் உண்மை. ஆனால், இந்த வாழை... மேலும் பார்க்க

One Nation One Election மசோதாவுக்கே 2 விதமான வாக்கெடுப்பு? | சிக்கலில் இரட்டை இலை? Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது! * மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்விகள்! * தேர்தலை எதிர்கொள்ளத் தெரியாமல்... வாக்கு இயந்திரத்த... மேலும் பார்க்க