செய்திகள் :

500 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை எட்டினார் எலான் மஸ்க்!

post image

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலக வரலாற்றில் 500 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி 400 பில்லியன் டாலர்களை எட்டிய எலான் மஸ்க் அடுத்த ஒருவாரத்தில் 100 பில்லியன் டாலர்கள் சம்பாரித்து அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார்.

மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேட்டரிகளை விற்பனை செய்யும் உலகின் மிகவும் மதிப்புமிக்க கார் தயாரிப்பாளரான டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், நாசாவல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ராக்கெட் உற்பத்தியாளரான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தையும் வழிநடத்துகிறார்.

இதையும் படிக்க..: சர்வதேசப் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு!

சமூக ஊடக தளமான டுவிட்டர்(எக்ஸ்), நியூராலிங்க் , எக்ஸ்ஏஐ மற்றும் போரிங் கம்பெனி போன்ற பிற முக்கிய நிறுவனங்களுக்கும் எலான் மஸ்க் தலைமை வகித்துவருகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். அதன்பின்னர் அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்புக்கு தனது ஆதரவைத் தெரிவித்து பிரசாரங்களிலும் கலந்து கொண்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், மஸ்க்கின் பங்குகள் பலமடங்கு உயர்ந்தது. கிட்டத்தட்ட 65 சதவீதம் அதிகரித்தது. சமீபத்தில் அமெரிக்க அரசு செயல் திறன் துறை தலைவராகவும் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார்.

இதையும் படிக்க..:ஆஸி.யின் வெற்றியை தட்டிப்பறித்த மழை! சமனில் முடிந்தது காபா டெஸ்ட்!

அதன்பின்னர், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனப் பங்குகள் பலமடங்கு உயரத் தொடங்கியதும் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் 19.2 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 474 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. தற்போது 500 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

2024 ஆம் ஆண்டில் மட்டும், எலான் மஸ்க் 245 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளார்.

எலான் மஸ்க் தற்போது உலகின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இரண்டாவது இடத்திலும், முகநூல் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிக்க..:சென்னையில் மீண்டும் காக்கா பிரியாணி?

ஜப்பானில் ராக்கெட் ஏவும் முயற்சி 2-ஆவது முறையாக தோல்வி!

டோக்கியோ: ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஸ்பேஸ் ஒன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று(டிச.18) 5 சிறிய செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவிய ராக்கெட் தொழில்நுட்பக் கோளாறால் விண்ணில் ஏவப்பட்ட அடுத்த சில நிமிடங்க... மேலும் பார்க்க

பூடானையும் ஆக்கிரமிக்கும் சீனா! இந்தியாவுக்கு சிக்கல்?

பூடான் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி 22 கிராமங்களில் சீன ராணுவம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது செய்றகைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.பூட்டானின் மேற்குப் பகுதியான டோக்லாமில் கடந்த 8 ஆண்டுகளில் ... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனா மீதான வழக்கு: காலக் கெடு நீட்டிப்பு

வங்கதேசத்தில் போராட்ட வன்முறை தொடா்பாக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விசாராணையை முடிப்பதற்கான காலக் கெடுவை இன்னும் இரண்டு மாதங்களுக்கு சிறப்பு நீதிம... மேலும் பார்க்க

முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு

குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி இகாா் கிறிலோவ் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டாா். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் உளவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து ரஷிய ஊடகங... மேலும் பார்க்க

சிடோ புயல்: 64 போ் உயிரிழப்பு

தென் கிழக்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தைத் தாக்கிய சிடோ புயலில் இதுவரை 64 போ் உயிரிழந்தனா். இந்தப் புயலில் நூற்றுக்கணக்கானவா்கள் முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரி... மேலும் பார்க்க

பாக். வன்முறை: காயமடைந்தோருக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருந்துகள் விநியோகம்!

பாகிஸ்தானில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால், காயமடைந்தவர்களுக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டுவருகின்றன.பாகிஸ்தானிய தொண்டு நிறுவனம் செவ்வாய்க்கிழமையன்... மேலும் பார்க்க