ஜப்பானில் ராக்கெட் ஏவும் முயற்சி 2-ஆவது முறையாக தோல்வி!
டோக்கியோ: ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஸ்பேஸ் ஒன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று(டிச.18) 5 சிறிய செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவிய ராக்கெட் தொழில்நுட்பக் கோளாறால் விண்ணில் ஏவப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியது. இதனால் ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதல் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.
வாகாயாமாவில் உள்ள ஸ்பேஸ்போர்ட் கீ தளத்திலிருந்து 5 சிறிய செயற்கைக் கோள்களுடன் இன்று காலை 11 மணியளவில் ஏவப்பட்ட கெய்ரோஸ்-2 ராக்கெட் தந்து இலக்கு பாதையை நோக்கி விண்ணில் சீறிப் பாய்ந்த சில நிமிடங்களிலேயே பூமியை நோக்கி திரும்பியது. 18 மீட்டர்(59 அடி) நீள்முள்ளா இந்த ராக்கெட்டில், பூமியிலிருந்து 500 கி.மீ. தொலைவில் சூரியனை ஒட்டி நிலைநிறுத்தப்படுவதற்காக தைவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயற்கைக்கோள் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்த நிலையில் தைவானின் செயற்கைக்கோள் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
முன்னதாக, இதே நிறுவனம் கடந்த மார்ச் மாதம் கெய்ரோஸ் என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்திய நிலையில், அந்த முயற்சியும் வெற்றியடையாமல் தோல்வியில் முடிந்தது. விண்ணில் ஏவப்பட்ட அடுத்த சில விநாடிகளிலேயே கெய்ரோஸ் ராக்கெட் வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.