அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்!
Rain Alert: '55 கி.மீ வேகமெடுக்கும் காற்று... இன்று தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை?'
கடந்த திங்கட்கிழமை சென்னை வானிலை மையத்தின் கணிப்புப்படி, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று காலை அப்டேட்டின் படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டிருந்தது.
தற்போது, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று மற்றும் நாளை தமிழ்நாடு கடலோர பகுதிகளில் அடித்து வரும் காற்று 30-ல் இருந்து 45 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 55 கிலோ மீட்டர் வேகத்திற்கு உயரும்.
வரும் வெள்ளிக்கிழமை, 30-ல் இருந்து 45 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் காற்று 55 கிலோ மீட்டர் வேகமாக உயர்ந்து வட தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வீசும்" என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், இன்று மாலை 4 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யலாம் என்று கூறியுள்ளது சென்னை வானிலை மையம். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.