Rain Alert: இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்டா?! - வேறு எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?!
சென்னை வானிலை மையத்தின் முந்தைய அலர்ட்களின் படி, இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
கூடவே, இன்று செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரிக்கும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆரஞ்சு அலர்ட் என்றால் கன மழை முதல் அதிக கன மழை பெய்யலாம்.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது, மஞ்சள் அலர்ட்.
சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யலாம். தற்போது, இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையத்தின் முந்தைய கணிப்புகளின் படி, நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.