பாஜக, ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானது: கார்கே விமர்சனம்
கபில் தேவின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களிலும், இந்திய அணி 260 ரன்களில் ஆல் அவுட் ஆகின. தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய இந்தியாவின் வேகப்பந்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறியது.
இதையும் படிக்க..:பும்ரா - ஆகாஷ் தீப் வேகத்தில் வீழ்ந்தது ஆஸி.! இந்தியாவுக்கு 275 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் கம்மின்ஸ் டிக்ளேர் செய்தார்.
இந்திய அணித் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முதல் இன்னிங்ஸிலும் 6 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா 21 விக்கெட்டுகள் எடுத்து இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவைப் பின்னுக்குத் தள்ளி ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தை தனதாக்கியுள்ளார்.]
இதையும் படிக்க..:நியூஸி. அணியின் புதிய கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமனம்!
ஆஸ்திரேலியாவில் அதிக விக்கெட்டுகள்
ஜஸ்பிரித் பும்ரா -52
கபில் தேவ் -51
சர்ஃபராஸ் நவாஸ் -50
அனில் கும்ப்ளே -49
இம்ரான் கான் -45
ரவிச்சந்திரன் அஸ்வின் -40