கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில் அரசு தோல்வி; ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும்:...
ஸ்ரீவைகுண்டம் : 800 பயணிகளை காப்பாற்றிய சம்பவம்; ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரயில்வேயின் உயரிய விருது!
மழை வெள்ளத்தின் போது ரயிலை நிறுத்தி வைத்து 800 பயணிகளை காப்பாற்றிய செயலுக்காக ரயில்வேயின் உயரிய 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' விருது ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்களின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், ரயில்வேயின் பல்வேறு மட்டங்களில் பணியாற்றும் 100 சிறந்த பணியாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் (Ati Vishisht Rail Seva Puraskar) விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுக்கு தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஸ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. டிசம்பர் 17 அன்று இரவு 9 மணியளவில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் ஏ.ஜாபர் அலி, ரயில் நிலையத்திற்கு முன்னால் உள்ள ரயில் பாதை வெள்ள நீரில் மூழ்கியிருப்பதைப் பற்றி பொறியியல் அதிகாரியிடம் இருந்து எச்சரிக்கை தகவலை பெற்றார். சில நிமிடங்களில் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும் 800 பயணிகள் பயணித்த அந்த ரயிலை உடனடியாக நிறுத்தினார்.
பிளாட்பாரத்தில் வெள்ள நீர் எதுவும் இல்லை, எதற்கு ரயிலை வெகு நேரம் நிறுத்தி வைத்துள்ளீர்கள் என ரயில்வே ஸ்டேஷனில் மின்சாரம் இல்லாத சூழலில் ஸ்டேஷன் மாஸ்டரிடம் பயணிகள் கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு, ரயில் நிலையத்தின் நான்கு பக்கமும் வெள்ளம் சூழ்ந்திருப்பதைக் கண்ட பயணிகள் அமைதியானர்கள்.
பயணிகளை மீட்க மீட்பு படையினர் வருவதற்கு காலதாமதமான நிலையில் உள்ளூர் மக்கள பயணிகளுக்கு உணவு அளித்தனர். தண்ணீர் வடியத் தொடங்கிய பிறகுதான் தண்டவாளங்கள் பல மீட்டர் தூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததை அதிகாரிகள் பார்த்தனர்.
மிக மோசமான விபத்தை தவிர்த்து செந்தூர் எக்ஸ்பிரஸில் சுமார் 800 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியது, கோபப்பட்ட பயணிகளிடம் பொறுமையாக பதில் அளித்தது உள்ளிட்ட செயல்பாட்டுக்காக ரயில்வே வாரித்தின் மதிப்புமிக்க விருதான 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' விருதுக்கு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் ஏ.ஜாபர் அலி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதுகள் வருகின்ற டிசம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள 69 ஆவது ரயில்வே வாரவிழாவில் வழங்கப்பட உள்ளது. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த விருதுகளை வழங்குகிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...