ரஷியாவில் புற்றுநோய் தடுப்பு மருந்து தயார்! இலவசமாக வழங்கவும் திட்டம்
Pan 2.0 - `பழைய பான் கார்டை கட்டாயமாக மாற்ற அவசியமில்லை' - என்ன சொல்கிறது அரசு?!
ஒரு திட்டம் புதியதாக வந்தால், உடனே அது சம்பந்தமான மோசடியும் முளைத்து விடுவது லேட்டஸ்ட் டிரண்ட் ஆக உள்ளது.
பான் 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் ஒரு மாதம் கூட முழுவதுமாக ஆகவில்லை. அதற்குள், அது சம்பந்தமான மோசடிகள் நடக்கத் தொடங்கி விட்டன.
மக்களின் எளிமையான பயன்பாடு மற்றும் பிசினஸ் நடைமுறைகளுக்காக QR கோடு இடம்பெறும் பான் கார்டு அப்டேட் வசதி பான் 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் திட்டத்தில் கட்டாயம் அனைவரும் பான் கார்டை அப்டேட் செய்ய வேண்டுமென்பதில்லை என்பது முன்னரே கூறப்பட்டது. உங்களுக்கு வேண்டுமானால் அல்லது பான் கார்டில் எதாவது தகவலை அப்டேட் செய்ய வேண்டுமானால் மட்டும் பான் 2.0 திட்டத்தில் விண்ணப்பித்து புதிய பான் கார்டு பெறலாம் என்று அரசு கூறியிருந்தது.
தற்போது, பான் கார்டு அப்டேட் சம்பந்தமான பல மோசடிகள் நடக்கத் தொடங்கி விட்டன. 'பான் கார்டு கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும். அதற்கான கட்டணத்தை செலுத்துங்கள்' என்று பல போன்கால் வரத் தொடங்கியிருக்கின்றன.
மேலும், அவர்களே ஒரு பான் கார்டு அப்டேட் வலைதளத்தின் லிங்க் அனுப்பி பான் கார்டை அப்டேட் செய்ய கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் அனுப்பும் வலைதளத்தின் லிங்கானது மோசடி நபர்களால் அச்சு அசலாக பான் கார்டு அப்டேட் வலைதளத்தை போலவே உருவாக்கப்பட்ட வலைதளத்தின் லிங்க் ஆகும்.
இதில் நம் தகவல்களை நிரப்பி, பணம் கட்டும்போது பணத்தோடு, நமது தகவல்களும் மோசடி நபர்களின் கைகளுக்கு சென்றுவிடுகிறது.
இந்த நிலையில், நாம் அனைவரும் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது இது தான்...
'தற்போது இருக்கும் பழைய பான் கார்டை கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும் என்பதில்லை. அது செல்லும் மற்றும் நாம் எங்கேயும் அந்த பான் கார்டை பயன்படுத்த முடியும். உங்களுக்கு வேண்டுமானால் அல்லது பழைய பான் கார்டில் தகவல் எதாவது மாற்றம் செய்ய வேண்டும் அல்லது அப்டேட் செய்ய வேண்டும் என்றால் மட்டும் பான் 2.0 திட்டத்தில் விண்ணப்பித்தால் போதும்'.
மேலும், அப்டேட் செய்ய விரும்பினால் www.onlineservices.nsdl.com மற்றும் www.pan.utiitsl.com வலைதளத்தில் தான் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.