செய்திகள் :

``பழிவாங்குகிறார்கள்.." - மீண்டும் வெடிக்கிறதா சாம்சங் ஊழியர்கள் போராட்டம்! - என்ன சொல்கிறது CITU?

post image

சாம்சங் ஊழியர்கள் நடத்திய போராட்டம்

அதிகாரப்பூர்வ தொழிற்சங்கம் இல்லாமல் வேலை செய்துவந்த சாம்சங் தொழிலாளர்கள், தொழிற்சங்கம் அமைக்க கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி போராட்டத்தை முன்னெடுத்தனர். சாம்சங் ஊழியர்கள் தொடங்கிய இந்தப் போராட்டம், 30 நாள்களைக் கடந்து நடந்தது. இவர்களுக்கு ஆதரவாக சிஐடியு களத்தில் நின்றது. இந்தப் போராட்டத்தின் முடிவில், அக்டோபர் மாதம் சாம்சங் நிர்வாகம் - போராடும் சாம்சங் தொழிலாளர்கள் என இரு தரப்பிலும் அரசு சார்பாக எ.வ.வேலு, டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட சில வாக்குறுதிகளின் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

எ.வ.வேலு

அமைச்சர் எ.வ.வேலு நடத்திய பேச்சுவார்த்தை

இது தொடர்பாக அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது சாம்சங் நிர்வாகம் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் சுமுகமானப் பேச்சுவார்த்தை சாம்சங் நிர்வாகம் மற்றும் சாம்சங் தொழிலாளர்கள் என இரு தரப்பிலும் நடத்தப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்...

இந்த நிலையில், போராட்டத்தை முடித்துக்கொண்டு வேலைக்குத் திரும்பிய பல ஊழியர்களுக்கு ஏற்கெனவே செய்த வேலையை வழங்காமல், வேறு வேலைகளில் ஈடுபடுத்தியதாகவும், 30-க்கும் அதிகமானோருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்களை பழிவாங்கும் செயலில் சாம்சங் நிர்வாகம் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பதால், நாளை (19-ம் தேதி) அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிஐடியு அழைப்பு விடுத்துள்ளது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேஷ்

இது தொடர்பாக சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் சிவாவிடம் பேசினோம். அவர், ``சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சாம்சங் நிர்வாகம் 6 வார காலத்தில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும் என உத்தரவிட்டது. இதில் 2 வாரகாலம் முடிந்த நிலையில், சாம்சங் நிர்வாகத்துக்கு தற்போது ஒரு நெருக்கடி சூழல் உருவாகியிருக்கிறது. அமைச்சர்கள் தலைமையில் ஏற்கெனவே நடந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், தொழிலாளர்கள் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். அதில், தொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு சாம்சங் நிர்வாகம் ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

``ஊழியர்களுக்கு எதிராக மிரட்டல், பழிவாங்கல்..''

ஆனால், இரண்டு மாதங்கள் கடந்தும் சாம்சங் நிர்வாகம் இதுவரை எந்த பதிலும் கொடுக்கவில்லை. இன்னும் ஒருவாரம்... இன்னும் ஒருவாரம் எனத் தொடர்ந்து காலக்கெடுவை நீட்டிக்கொண்டே செல்கிறது. சாம்சங் நிர்வாகம் Samsung Employee Federation எனும் ஒரு சங்கத்தை அமைத்து, அதன் மூலம் சாம்சங் தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்களை மிரட்டுவது, பழிவாங்குவது என ஊழியர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறது. போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 11 ஊழியர்கள் உள்பட 35 ஊழியர்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள்.

சிஐடியு

சாம்சங் நிர்வாகத்தின் பணிச் சுமையால், பழிவாங்கும் செயல்பாடுகளால் சிஐடியு-வின் உறுப்பினரான சாம்சங் ஊழியர் ஒருவர் தற்கொலை முயற்சிக்கூட செய்திருக்கிறார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேஷிடம் தொலைபேசி வழியாகப் பேசியபோது, `இதை கவனித்துக்கொள்கிறேன்... பார்த்துக்கொள்ளலாம்' என்றுமட்டும்தான் தெரிவித்தார். எனவே, சாம்சங் நிர்வாகத்தின் தொடர் பழிவாங்கும் செயல்பாடுகளாலும், எங்கள் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் நிறுவனத்துக்குள்ளேயே நாளை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருக்கிறோம்." என்றார்.

Pan 2.0 - `பழைய பான் கார்டை கட்டாயமாக மாற்ற அவசியமில்லை' - என்ன சொல்கிறது அரசு?!

ஒரு திட்டம் புதியதாக வந்தால், உடனே அது சம்பந்தமான மோசடியும் முளைத்து விடுவது லேட்டஸ்ட் டிரண்ட் ஆக உள்ளது. பான் 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் ஒரு மாதம் கூட முழுவதுமாக ஆகவில்லை. அதற்குள், அத... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: இடிந்த விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்; முகாமிடும் சமூக விரோதிகள்- சீரமைக்க கோரும் மக்கள்

திருப்பத்தூர் அடுத்த மடவாளத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியின் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு 45 ஆண்டுகளுக்குமேல் ஆகிறத... மேலும் பார்க்க

திருவொற்றியூர்: அம்மா உணவகத்துக்கு சீல்; போராட்டத்தில் இறங்கிய அதிமுக-வினர்! - என்ன நடந்தது?

சென்னையில் உள்ள திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு அருகே அமைந்திருந்த அம்மா உணவகக் கட்டடம், கடந்த திங்கள்கிழமை மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பேசுபொருளாகியிருக்கிறது.ச... மேலும் பார்க்க

`அதிகார போதையில் அமைச்சர்கள்' - திமுகவை எகிறி அடிக்கும் வேல்முருகன்... பின்னணி என்ன?

தி.மு.க எதிர்ப்பை வழக்கத்தைவிட கூர்மைப்படுத்தியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். இவரது அண்மைகால நடவடிக்கைகள் தி.மு.க கூட்டணியில் தொடர்வாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. வேல்முருகன... மேலும் பார்க்க

`ஒருபக்கம் விலகல்... மறுபக்கம் தேர்தல் பணி..!’ - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சி-யில்?

கட்சியிலிருந்து விலகி, தலைமை மீது சேற்றைவாரி வீசி விட்டு மாற்று முகாமில் முக்கிய நிர்வாகிகள் இணைவது நா.த.க-வினரை உளவியல் ரீதியாக பாதித்திருக்கிறது. இந்த பின்னடைவிலிருந்து மீள பல்வேறு நடவடிக்கைகள் சீனி... மேலும் பார்க்க

பிரசவத்தின்போது சேய், தாய் உயிரிழந்த சோகம் - அரசு மருத்துவமனையில் போலீஸ் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன்.இவர் ஆவடி பட்டாலியன் படையில் காவலராகப் பணிபுரிந்துவருகிறார். இவரின் மனைவி அனிதா (24). இந்த நிலையில், நிறைமாத கர்ப்ப... மேலும் பார்க்க