அந்நிய நிதி வெளியேற்றத்தால் மீண்டும் சரிந்த பங்குச் சந்தைகள்!
கேரம் சாம்பியன் காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு!
உலக கேரம் சாம்பியன் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற காசிமாவுக்கு தமிழக துணை முதல்வர் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற 6ஆவது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை காசிமா(17), 3 பிரிவுகளிலும் தங்கம் வென்றார்.
இதையும் படிங்க..: ஆஸி.யின் வெற்றியை தட்டிப்பறித்த மழை! சமனில் முடிந்தது காபா டெஸ்ட்!
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான காசிமா, மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழுப் பிரிவு என 3 பிரிவிகளிலும் முதலிடம் பிடித்து அசத்தினார்.
கடந்த ஜூலை மாதம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காசிமாவின் பயணத்திற்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவி வழங்கி வாழ்த்தியிருந்தார். அதன்தொடர்ச்சியாக, அவர் பதக்கம் வென்றதை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு பரிசுத் தொகையான ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.