ரஷியாவில் புற்றுநோய் தடுப்பு மருந்து தயார்! இலவசமாக வழங்கவும் திட்டம்
பூங்காற்று திரும்புமா... மோதலும் காதலும் சீரியல் நாயனின் புதிய தொடர்!
மோதலும் காதலும் சீரியல் நாயகன் நடிக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல்வரை' தொடரின் தழுவலாக எடுக்கப்பட்ட தொடர் மோதலும் காதலும் சீரியல்.
பள்ளி செல்லும் பெண் குழந்தையுடன் இருக்கும் விவாகரத்தான ஆண் தொழிலதிபர் மற்றும் குழந்தைகள் நல பெண் மருத்துவர் இடையே நடக்கும் கதைதான் மோதலும் காதலும். இத்தொடர் 304 எபிஸோடுகளுடன் குறுகிய காலத்தில் முடிவடைந்தது.
இதையும் படிக்க: எதிர்நீச்சல் 2: தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
இத்தொடரில் நாயகனாக நடித்த சமீர், தற்போது முத்தழுகு தொடர் நாயகி ஷோபனாவுடன் புதிய தொடரில் நடிக்கிறார்.
இத்தொடருக்கு பூங்காற்று திரும்புமா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்தொடரில் நடிகர் ஆனந்த் பாபு பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.
பூங்காற்று திரும்புமா தொடரின் படப்பிடிப்பு நேற்று(டிச. 17) பூஜையுடன் தொடங்கப்பட்டது. இத்தொடரை தாய் கிரேயேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும், இத்தொடரின் முன்னோட்டக் காட்சி, ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.