செய்திகள் :

அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்! - கார்கே

post image

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள் விவாதத்தின் முடிவில், நேற்று(செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்' என்று கூறினார்.

இதையும் படிக்க | அம்பேத்கருக்கு அவமதிப்பு: நாடாளுமன்றத்தில் போராட்டம்.. அவைகள் ஒத்திவைப்பு!!

இந்தநிலையில், அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியதாகக் கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி இன்று போராட்டம் நடத்தினர். இதனால் இன்று அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,

அம்பேத்கரையும் அரசியலமைப்பையும் அமித் ஷா அவமதித்துள்ளார். இதன் மூலமாக மனுஸ்மிருதி, ஆர்எஸ்எஸ் பற்றிய அவரது சித்தாந்தம், அம்பேத்கரின் அரசியலமைப்பை மதிக்க விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இதற்கு அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

நேற்று அமித் ஷா பேசும்போது, நான் பேசுவதற்கு அவையில் அனுமதி கேட்டு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது, ​​அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததால், அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் அமைதியாக இருந்தோம். அமித் ஷா பேசியதற்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்' என்றார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல்: கூட்டுக்குழுவுக்கு பிரியங்காவை பரிந்துரைத்த காங்கிரஸ்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆய்வு செய்யவுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பிரியங்கா காந்தியை காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது.மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன... மேலும் பார்க்க

டாடா இரும்புச் சுரங்கத்தில் 'பெண்கள் ஷிஃப்ட்'! இந்தியாவில் முதல்முறை!!

ஜார்க்கண்டில் உள்ள டாடா இரும்புச் சுரங்கத்தில் ஒரு ஷிஃப்ட் முழுவதும் பெண்கள் பணிபுரிகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டம் நோமுண்டி நகரத்தில் டாடா நிறுவனத்தின் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த... மேலும் பார்க்க

முதியோர்களுக்கு இலவச சிகிச்சை: ஆம் ஆத்மி அதிரடி!

தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தபிறகு வயதான முதியோர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் அதிரடி திட்டத்தை புதன்கிழமை அறிவித்தார். தலைநகர் தில்லியில் 2025 பிப்ரவ... மேலும் பார்க்க

முகமூடி கிழிந்தது! மதவெறிக் கட்சியிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? மமதா

அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவட... மேலும் பார்க்க

தென்னிந்தியர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை! வேலைவாய்ப்பு விளம்பரத்தால் சர்ச்சை!

நொய்டாவை மையமாக கொண்டு இயங்கும் தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விளம்பரத்தில் தென்னிந்தியர்கள் தகுதியில்லை என்று குறிப்பிட்டுள்ளது.பொதுத் தளத்தில் பதிவிடப்படும் விளம்பரத்தில் வெளிப்படையாக குறிப்பிட்... மேலும் பார்க்க

விஎச்பி விழாவில் நீதிபதி சர்ச்சை பேச்சு: உச்சநீதிமன்ற கொலீஜியம் எச்சரிக்கை!

விஎச்பி விழாவில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த டிச. 8 ஆம் தேதி வலது... மேலும் பார்க்க