செய்திகள் :

புஷ்பா-2 நெரிசலில் சிக்கிய சிறுவனின் உடல்நிலை பற்றிய அதிர்ச்சித் தகவல்!

post image

அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க திரையரங்குக்குச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான சம்பவத்தில் அவரது 9 வயது மகன் ஸ்ரீ தேஜ், மூளைச் சேதமடைந்து சிகிச்சையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ தேஜ் மிக மோசமான நிலையில் மூளை சேதமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் குணமடைய மிக நீண்ட காலம் ஆகலாம் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுவனின் மருத்துவத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கும் நிலையில், சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிச. 4-ஆம் தேதி இரவு புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது சந்தியா திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பரிதாபமாக பலியானார்.

நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் டிச.5ஆம் தேதி காலை வெளியானது. படம் வெளியாவதற்கு முன் சில திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் முதல் நாள் வெளியிடப்பட்டது.

அதுபோல, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 படம் பார்க்கச் சென்ற போது தில்சுக்நகரைச் சேர்ந்த 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிலையில், அவரது 9 வயது மகன் படுகாயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

திரையரங்குக்கு திடீரென நடிகர் அல்லு அர்ஜூன் வந்ததே, கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளார்.

நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் வருவதை தியேட்டர் நிர்வாகம் அறிந்திருந்தும், அவர்களுக்கென்று தனி வழியோ, வெளியேற வழியோ இல்லை என்று குற்றம்சாட்டி திரையரங்கு மீதும் வழக்குப் பதிவ செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை! வேலைவாய்ப்பு விளம்பரத்தால் சர்ச்சை!

நொய்டாவை மையமாக கொண்டு இயங்கும் தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விளம்பரத்தில் தென்னிந்தியர்கள் தகுதியில்லை என்று குறிப்பிட்டுள்ளது.பொதுத் தளத்தில் பதிவிடப்படும் விளம்பரத்தில் வெளிப்படையாக குறிப்பிட்... மேலும் பார்க்க

விஎச்பி விழாவில் நீதிபதி சர்ச்சை பேச்சு: உச்சநீதிமன்ற கொலீஜியம் எச்சரிக்கை!

விஎச்பி விழாவில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த டிச. 8 ஆம் தேதி வலது... மேலும் பார்க்க

அம்பேத்கர் பற்றிய அமித் ஷா கருத்தைக் காங்கிரஸ் திரித்துவிட்டது: கிரண் ரிஜ்ஜு

அவை நடவடிக்கைகளைச் சீர்குலைப்பதற்காக டாக்டர் அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்தை காங்கிரஸ் திரித்து விட்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அர... மேலும் பார்க்க

அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த பாவங்கள்: பிரதமர் மோடி

புது தில்லி: அம்பேத்கர் மீது முழு மரியாதை இருக்கிறது, அவரை முழுமையாக மதிக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும், அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த பாவ... மேலும் பார்க்க

பாஜக, ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானது: கார்கே விமர்சனம்

புதுதில்லி: பாஜக-ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்ப... மேலும் பார்க்க

அம்பேத்கர் பற்றி அமித் ஷா பேசியது என்ன?

மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, மாநி... மேலும் பார்க்க