செய்திகள் :

நவீன தாண்டவம்... `காலப்பயணம் 2100' - சிறுகதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.

ஜனவரி மாதம் 10-ம் தேதி 2100ம் ஆண்டு.

லண்டனில் உள்ள தஞ்சாவூர் உணவகத்தில் ஜோசப் தன் மனைவியை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான்.

ஜோசப் சென்னையில் இருந்தாலும் உலகம் முழுவதும் சுற்றி வருபவன். மனைவி ஸ்டெல்லா லண்டனில் பிறந்த தமிழ் பெண். அழகாக தமிழ் ஆங்கிலம் கலந்து பேசுவாள்.

இரண்டு நிமிடத்தில் ரோப் டாக்ஸியில் இருந்து இறங்கி வந்து ஜோசப் முன் அமர்ந்தாள்.

"ஹேய் ஜோஸ் என்ன திடீர்னு இப்படி பகல் நேரத்தில் அவசரமான சந்திப்பு?" கணவனைச் செல்லமாக ஜோஸ் என்று தான் அழைப்பாள்.

மெலிதாக புன் முறுவல் பூக்க தன் மனைவியை பார்த்தான்...

"இன்று இரவு எனது கம்பனி நியூயார்க்கில் பார்ட்டி வச்சிருக்காங்க அங்கிருந்து சென்னை போயிட்டு வீட்டிற்கு வர இரண்டு நாட்கள் ஆகிடும் அதான் இப்போதே பார்த்து பேச வந்தேன்"

"சரி நீ சென்னையில் இருந்து போன் செய்து மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. சென்னையில் இருந்து ஏர் டெஸ்லா லண்டனுக்கு ஒன்னவர்ல வந்திடுமே? பிறகு ஏன் லேட்?"

"சாரிப்பா நான் டெல்லி போய் அங்கு ஒரு நண்பரை சந்தித்து விட்டு வருகிறேன். அவரிடம் ஒரு அரைமணி நேரம் பேசிவிட்டு கிளம்பி வந்தேன் டியர் "

சித்தரிப்புப் படம்

"ஓ... நோ... இன்னும் நீ 2025லேயே இருக்க. எப்போது மாற போர? அரைமணி நேரம் எவ்வளவு காஸ்ட்லி தெரியுமா?"

"எஸ் ஐ நோவ்... பட் அந்த அரை மணி நேரத்திற்கு பெரிய ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு"

"ரியலி..?" அதைக் கேட்டு மகிழ்ச்சியில் தன் கணவனுக்கு முத்தமிட்டாள்.

"ஓக்கே... இப்ப சொல்லு எதற்காக இந்த சந்திப்பு?"

"அது வந்து..."என்று இழுத்தான்.

"பட்டுனு சொல்லு நேரம் இல்லை"

"என்னுடையத் தந்தை ஊரில் இருக்கார் இல்லையா?"

"எஸ்.. அங்கிளுக்கு என்னாச்சு உடம்பு சரியில்லையா?"

"நோ.. நோ.. அதெல்லாம் இல்லை. ஆனால் அவர் தனியாக இருப்பதால் யாரிடமாவது பேச வேண்டும் என்று தெருக்களில் சுற்றி திரிகிறார். பட் அதை மற்றவர்கள் தங்கள் பிரைவசி பாதிக்கிறது என்று 19 முறை காவல் நிலையத்தில் கம்ப்ளைண்ட் பண்ணிட்டாங்க"

"ஓ மை காட். அப்புறம் என்னாச்சு?"

"கவர்மெண்ட் எனக்கு நோட்டீஸ் அனுப்பி விட்டது. இன்னும் ஒரு கம்ப்ளைண்ட் வந்தால் நான் பத்து கோடி ரூபாய் ஃபைன் கட்டனும். டாடியை பார்த்துக் கொள்ள மெய்டைன் பீஸ் மாதம் ஐம்பது லட்சம் கேட்கிறாங்க ஓல்டு ஹோம் கம்பெனிகள். அதான் உன்னால் பார்த்துக் கொள்ள முடியுமா என்று..."

அவன் சொல்லி முடிப்பதற்குள் பயங்கர கோபத்துடன் ஸ்டெல்லா...

"ஏய் என்னப்பா கொஞ்சம் கூட நீ யோசிக்க மாட்டியா? காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை நான் எனது கம்பனிக்காக வேலை செய்தாக வேண்டும். நான் யாரை சந்திக்க வேண்டும் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்பதெல்லாம் என் கம்பனிதான் டிசைட் பண்ணும். இப்ப கூட உன்னைச் சந்திக்க ஒன்பது நிமிடம் இன்சென்டிவ் கொடுத்துருக்கு. பத்து நிமிடத்தில் நான் ரோப் டாக்ஸியில் இருக்க வேண்டும். இல்லையென்றால்....என் அக்கவுண்டில் இருந்து ஆயிரம் கிரிப்டோ எடுத்துடுவாங்க அதெல்லாம் உனக்கும் தெரியும் பிறகு எப்படி உங்கப்பாவை நான் பார்த்துக் கொள்ள முடியும்?"

அதைக் கேட்டு ஜோசப் அமைதியாக அமர்ந்திருந்தான் மீண்டும் ஆரம்பித்தாள்.

சித்தரிப்புப் படம்

"சரி உங்க அப்பா, நீ டிசைட் பண்ணு. நான் லெட்டர் தருகிறேன் பார்க்க முடியாது! என்று. நீயும் சைன் பன்னிரு, ஹயானாக்கு அப்ளைப் பன்னு" என்று கூறி விட்டு ரோப் டாக்ஸியில் ஏறி போய் விட்டாள்.

தன் தந்தையை நினைத்து கவலைப்பட்டவனாக கண்கள் கலங்க கடவுளிடம் கையேந்தினான். "கர்த்தரே அந்த இருபதாவது கம்ப்ளைன்ட் வந்து விடக்கூடாது என் தந்தைக்கு வேற எந்த நிலைமையும் ஆகக்கூடாது காப்பாற்றுங்கள்"

ஹயானா என்பது உலகம் முழுவதும் தற்போது பிரபலமாகி கொண்டு வரும் கருணை கொலை மெஷினை தயாரிக்கும் நிறுவனம்.

அரசாங்கத்திடமிருந்து அனுமதி நோட்டீஸ் வாங்கி குடும்பத்தினர் கையொப்பமிட்டு கொடுத்து விட்டால் அந்த நிறுவனமே உறங்கும் போதே எந்த வலியும் இல்லாமல் கொலை செய்து விடுவார்கள். அதற்குத்தான் அப்ளை செய்து விடுங்கள் என்று கூறிவிட்டு போகிறாள் மனைவி.

இந்தியாவில் தற்போதெல்லாம் பிறரிடம் பேசுவதை குற்றமாக கருதுகிறார்கள். வீட்டு வாசலில் ஏதாவது உதவி கேட்டு வந்தாலே அது தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக நினைத்து உடனடியாக காவல்துறையில் புகார் செய்து விடுகிறார்கள். அக்கம் பக்கத்து வீட்டினர்கூட பேசிக் கொள்வதிவதில்லை. இருபது புகார்கள் வந்துவிட்டால் உடனடியாக அரசாங்கம் அதற்குண்டான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

ஒருவேளை சம்பந்தப்பட்டவர் 75 வயதை தாண்டி விட்டால், அவரைப் பார்த்துக் கொள்வதற்கு ஆள் இல்லை என்றால், அவரால் பிறருக்கு சிரமம் இருக்கும் என்றால் அரசாங்கமே கருணை கொலை செய்வதற்கு பரிந்துரை செய்து விடும். இந்த சட்டத்தை 2090ல் கொண்டு வந்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 75 வயதுக்கு மேல் இருந்தவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள்.

சித்தரிப்புப் படம்

ஹயானா கம்பெனிக்கு 50 லட்சம் பணம் கட்ட வேண்டும். அதுபோல குடும்பத்தினர் கையெழுத்து போட்டு வந்த 20 புகார்களையும் சேர்த்து 48 சதவீதம் ஜிஎஸ்டி கட்டி விட்டால் அரசாங்கம் அனுமதி அளித்து விடும்.

அதே நேரம் ஜோசபின் சொந்த ஊரான யானையூரில்...

வீட்டு ஜன்னலில் நின்று கொண்டிருந்த ஐந்து வயது ஸ்னோகா, "மம்மி இங்க யாரோ ஒரு அங்கில் நம்ம வீட்டையே பாத்துகிட்டு நிக்கிறார்" என்று கூறியவுடன் உள்ளே இருந்த தாய்க்கு பெரும் கவலை தொற்றி பயம் ஏற்பட்டது.

"ஸ்னோ கதவை திறந்து விடாதே நான் வருகிறேன்" என்று ஓடி வந்தாள்.

கதவில் இருக்கும் கேமரா வழியாக அந்த பெரியவரை பார்த்தாள் அதிலேயே அவசர பொத்தான் இருந்தது அதை அழுத்தினால் அவரை புகைப்படம் எடுத்து காவல்துறைக்கு அனுப்பி முதலுதவியை கேட்கும்.

அந்த இருபதாவது புகார் செய்வதற்கு பொத்தானை அழுத்த மேலிருந்த மூடியை திறந்தாள்.

"மம்மி அந்த அங்கிள் நல்ல அங்கில் மா அழுகிறார்"

பொத்தானை அழுத்த தயாரானவள் அதைக் கேட்டதும் சற்று நிதானமாகி கதவைத் திறந்து அவரைப் பார்த்தாள். ஆமாம் அழுது கொண்டு அந்த பெரியவர் அந்த வீட்டு வாசலில் நின்றார்.

"வெளியே சென்ற அந்தப் பெண் சார் ஏன் அழுகுறீங்க? ஏன் இங்கு நிக்கிறீங்க? ஏதாவது பணம் வேணுமா பெக்கரா நீங்க?" என்று அடுக்கடுக்காக கேள்வியை தொடுத்தாள்.

அது அந்த பெரியவரை மனம் குளிர வைத்தது. ஏனென்றால் யாருமே கடந்த சில ஆண்டுகளாக இவரிடம் பேசுவதே இல்லை. சந்தோஷப்பட்ட அந்த பெரியவர் அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்தார்...

"அம்மா நான் பெக்கரெல்லாம் இல்ல பெரிய பணக்காரன். என் மகன் என் வீட்டுக்குள்ளேயே எல்லா வசதிகளும் செய்து தந்திருக்கிறான். சாப்பாடு கூட வேளா வேளைக்கு வந்துரும்.

பல வருஷமா நான் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கிறேன். என் மகன் எல்லா வசதிகளையும் என் வீட்டிற்குள்ளேயே செய்து தந்திருக்கிறார். ஆனால் நான் பேசுவதற்கு வெளியே வந்தால் எல்லோரும் முகத்தை திருப்பிக் கொண்டு போய் விடுகிறார்கள் ஆகவே தான் நான் வீட்டை விட்டு வெளியே வந்து பல வருஷங்கள் ஆகிவிட்டது"

சற்று அமைதியாகி தொடர்ந்தார்...

"இது நான் பிறந்த வீடு மா. 2024ல் பிறந்தேன். எங்க அப்பா ஆசை ஆசையா எங்களுக்காக கட்டிய வீடு. இதே தெருவில் தான் நான் வளர்ந்தேன். பக்கத்தில் அப்துல்லா வீடு இங்கு நாங்கள் ஓடி ஆடினோம். எங்களுக்குள் எந்த பாரபட்சமும் இல்லாமல் எல்லா வீட்டிற்கும் போய் வந்த காலம். ஆனால் இன்றைக்கு அப்படி போவது சட்டப்படி குற்றமாகப்பட்டு விட்டது"

"சார் நீங்க இந்த வீட்டில் பிறந்தீங்களா?"

"ஆமாம்மா உங்க அப்பா சுப்பிரமணிக்கு நான்தான் வீட்டை விற்றேன். அதில் வந்த பணத்தை வைத்து தான் என் மகனை நான் விரும்பியபடி படிக்க வைத்தேன். அதைப்போலவே அவனுக்கும் கை நிறைய சம்பளம். ஆனால், அவன் குடும்பத்தோடு லண்டனில் வசித்து வருகிறான். எல்லா வசதியும் இருந்தும் யாரிடமும் நேரடியாக பேச முடியவில்லை, என் மகனுக்கும் நேரமில்லை"

"ஐயா, அப்போ நீங்க யாரு?"

"நான் ஜோசபுடைய தந்தை ஐசக் ஆனா உங்களுக்கெல்லாம் மறந்து இருக்கும். நாங்கள் சின்ன வயதில் இருக்கும் பொழுது அமீனீசியா என்ற ஒரு நோய் சிலருக்கு வருவதாக கேள்விப்பட்டதுண்டு. ஆனால், இன்று அத்தனை பேரையுமே அந்த நோய் பிடித்திருப்பதால் என்னை உங்களுக்கு தெரியாது "

"ஏன் சார் உங்க மகன் இங்கு வருவதே இல்லையா?"

"என் மகனை போன் மூலமாக தான் பார்க்க முடியும் பேச முடியும். நானும் பழைய நினைவுகளோடு எத்தனை காலம்தான் வீட்டிற்குள்ளேயே இருக்க முடியும்? ஒரு முடிவோடு தான் வெளியே வந்துள்ளேன். என் நண்பர்களுடைய வீடுகளை எல்லாம் போய் பார்த்தேன். அவர்கள் குடும்பமெல்லாம் என்னைக் கண்டு பயந்து 19 முறை காவல்துறையில் புகார் அளித்து விட்டார்கள். கடைசியாக எனது தந்தை கட்டிய வீட்டை பார்ப்பதற்கு தான் இங்கே வந்தேன்.... ஆனால் நீங்களும் அந்த வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்டி விட்டீர்கள் அந்த துயரம் தாங்காமல் தான் நான் அழுது கொண்டு நின்றேன்"

"ஐ அம் சாரி சார்..."

சித்தரிப்புப் படம்

"பரவால்லம்மா பரவாயில்லை... எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்திடுமா அது போதும்"

"சொல்லுங்க சார் தாராளமாக செய்கிறேன்"

"காவல்துறைக்கு ஒரு புகார் அனுப்பிடுமா 20 புகார் கிடைத்தால் எனக்கு கருணை கொலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தனிமையில் தினம் தினம் நான் சாவதை விட ஒரே நாளில் இறந்து விடுவேன் அல்லவா? அந்த உதவியை மட்டும் செய்யுமா"

அதைக் கேட்ட அந்த பெண்ணுக்கு இரக்கம் தோன்றியது.

"ஐயா நானும் ஒரு பிள்ளை தான் வைத்திருக்கிறேன். அரசாங்கத்தினுடைய சட்டம். நாளை எனக்கும் இதே நிலைதான் ஏற்படும். வேண்டாம் நீங்கள் தினமும் இங்கே வாருங்கள் என்னிடம் பேசுங்கள் என் மகளிடம் பேசுங்கள். பேசாமல் இருப்பதைவிட இறந்து விடுவதே மேல் என்று நினைக்கும் உங்களுக்கு கண்டிப்பாக நாங்கள் மருந்தாக இருப்போம்"

அதைக் கேட்டதும் அந்த பெரியவருக்கு அத்தனை சொத்துக்களும், அத்தனை சுகங்களும், அத்தனை வசதிகளும் தானியங்கி முறைகளில் கொடுத்திருக்கக் கூடிய தனது வீடு எல்லாம் துச்சமாக தெரிந்தது.

2024-ல் கலகலவென்று பேசித் திரிந்த காலத்தை நவீனங்கள் அழித்துவிட்டன.

-திப்பு ரஹிம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

புத்தக நட்பு! - குறுங்கதை| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

`பல்'லேகா -2: திரு - தெய்வத்திரு... இடைப்பட்டதே வாழ்க்கை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் –அத்தியாயம் 3 | தொடர்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

மௌனத்தின் மொழி - நான் எப்படி கதை எழுதினேன்..? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

குட்டி குரங்கு - சிறார் சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

`பல்’லேக்கா - தொடர்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க