அம்பேத்கர் அவமதிப்புக்கு அமித் ஷா பதில்சொல்லியே ஆக வேண்டும்: ஆம் ஆத்மி
நியூஸி. அணியின் புதிய கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமனம்!
நியூசிலாந்தின் டி20, ஒருநாள் கேப்டனாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து பதவி விலகிய கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக அதிகாரபூர்வ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
243 சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ள மிட்செல் சாண்ட்னர், டி20, ஒருநாள் அணிகளுக்கு நிரந்தர கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிட்செல் சாண்ட்னர் இதற்கு முன்பு 24 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார்.
32 வயதான அவர் டிசம்பர் பிற்பகுதியிலும் ஜனவரி தொடக்கத்திலும் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் தனது முழுநேர கேப்டன் பதவியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் பிப்ரவரி மாதத்தில் முத்தரப்பு தொடர், அதைத் தொடர்ந்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அணியை வழிநடத்தவுள்ளார்.
சமீபத்தில் இலங்கையில் நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அணியை வழிநடத்திய மிட்செல் சாண்ட்னர், ஒருநாள் மற்றும் டி20ஐ கிரிக்கெட்டில் 100 முறை நியூசிலாந்துக்காக விளையாடியுள்ள 4 பந்துவீச்சாளர்களில் ஒருவராவார்.
2020 ஆம் ஆண்டு பே ஓவலில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 போட்டிக்கு அவர் அணியைத் தலைமை தாங்கினார். 2022 இல் எடின்பரோவில் ஸ்காட்லாந்திற்கு எதிரான ஒரே ஒருநாள் போட்டியில் அவர் அணியை வழிநடத்தினார். மேலும், நியூசிலாந்தின் 24-வது ஒருநாள் கேப்டன் என்ற சிறப்பையும் பெற்றார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 28-ம் தேதி பே ஓவலில் தொடங்குகிறது.