BB Tamil 8: 'இந்த மாதிரி என்கிட்ட 'Attitude' காட்டாதிங்க செளந்தர்யா...'- கொதித்த...
வேலியே.. ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர், வருமான வரி ஊழியர்கள் கைது
சென்னை: சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில், வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் கைது உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடியைச் சேர்ந்த ஜூனை அகமது என்பவர், தன்னிடம் பணியாற்றும் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணம் கொடுத்து சென்னைக்குச் சென்று சிடி ஸ்கேன் இயந்திரத்தை வாங்கி வருமாறு அனுப்பினார்.
சென்னை வந்த முகமது கவுஸை, சிலர் வழிமறித்து தங்களை காவல்துறையினர் என்று கூறி சோதனை செய்வது போல நடித்து பணத்தைப் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணயில், வருமானவரித் துறை ஊழியர்கள் 3 பேர், காவல் உதவி ஆய்வாளர் என 4 பேர், முகமது கவுஸை வழி மறித்து பணத்தைப் பறித்துச் சென்ற வழக்கில் கைது செய்துள்ளனர்.