`பாரம்பர்ய அடையாளத்தை பாழ்படுத்திட்டாங்க!' - ஊட்டி மலை ரயில் நிலை புனரமைப்பு சர்...
அம்பேத்கர் அவமதிப்புக்கு அமித் ஷா பதில்சொல்லியே ஆக வேண்டும்: ஆம் ஆத்மி
அம்பேத்கர் குறித்து அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் கடுமையாகச் சாடியுள்ளார்.
நாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் அம்பேத்கர் பற்றி அமித் ஷா பேசிய பேச்சால் பலர் கொந்தளித்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று அவர் கூறினார்.
இதையடுத்து மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,
அமித் ஷா, மோடி மற்றும் ஒட்டுமொத்த பாஜகவும் பாபா சாகேப் அம்பேத்கரை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்பது தெரிகிறது. அம்பேத்கர் பெயரைக் கேட்டாலே அவ்வளவு வெறுப்பு.. இதற்கு தேசம் பதில் சொல்லும், அமித் ஷா நிச்சயம் பதிலளிப்பார்.
யார் யாரை இழிவுபடுத்துகிறார்கள் என்பது நேற்று தெளிவாகிவிட்டது. பாஜகவும், பிரதமரும், உள்துறை அமைச்சரும் அம்பேத்கரை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்
இதற்கிடையில், மாநிலங்களவையில் .அம்பேத்கர் குறித்து அமித் ஷாவின் கருத்து குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை தாக்கல் செய்தார்.
தாகூர் தனது ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸில், அமித் ஷா பி ஆர் அம்பேத்கரின் பாரம்பரியத்தை அவமதித்ததாகவும், "மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும்" குற்றம் சாட்டினார்.