செய்திகள் :

கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடக்கம்!

post image

தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் இன்று(புதன்கிழமை) தொடக்கிவைத்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கி விற்பனையைத் தொடக்கிவைத்தார்.

இதன்படி இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ. 199 -க்கு இனிப்பு பொங்கல் தொகுப்பு:

இதில் பச்சரிசி, வெள்ளம், ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருள்கள் உள்ளன.

இதையும் படிக்க | அம்பேத்கருக்கு அவமதிப்பு: நாடாளுமன்றத்தில் போராட்டம்.. அவைகள் ஒத்திவைப்பு!!

ரூ. 499 -க்கு சிறப்பு பொங்கல் தொகுப்பு

மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கடலை எண்ணெய், உளுந்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, கடுகு, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் 19 பொருட்கள் கொண்ட தொகுப்பாகும்.

ரூ. 999 பெரும் பொங்கல் தொகுப்பு

மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய், புளி, தனியா, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஏலக்காய், கடலை எண்ணெய், வரகு, சாமை, திணை, ரவை, அவல், ராகி மாவு, கோதுமை மாவு, ஜவ்வரிசி, வறுத்த சேமியா, மல்லித்தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கைப்பை என 35 பொருட்கள் கொண்டது.

சென்னையில் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்!

சென்னையில் 48 கி.மீ வேகத்தில தரைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (18-12-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ... மேலும் பார்க்க

சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு ... மேலும் பார்க்க

தன் முகத்திரையை தானே கிழித்துக்கொண்டார் அமித் ஷா: திருமாவளவன்

சென்னை: மக்களவையில் அம்பேத்கர் குறித்துப் பேசியதன் மூலம், தனது முகத்திரையை தானே கிழித்துக்கொண்டுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியிருக்கிறார்.அரசமைப்புச... மேலும் பார்க்க

"வீட்டில் ஆம்பளைங்களே இல்லையா?" - பாமக எம்.எல்.ஏ அருள் சர்ச்சை பேச்சு!

சேலம்: கோவில் விவகாரத்தில் உங்கள் வீட்டில் ஆம்பளைங்களே இல்லையா? என பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூ... மேலும் பார்க்க

சென்னையில் மீண்டும் காக்கா பிரியாணி?

சென்னையில் 'காக்கா பிரியாணி' விற்கப்படுகிறதா? விற்கப்பட்டுக் கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சியை அளித்திருக்கிறது ஒரு செய்தி.சென்னையில் தற்போது சைவ உணவகங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆம்பூர், வாணியம்பாட... மேலும் பார்க்க

'மக்களைப் பற்றி கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்' - முதல்வர் ஸ்டாலின்!

நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள் விவா... மேலும் பார்க்க