BB Tamil 8: 'இந்த மாதிரி என்கிட்ட 'Attitude' காட்டாதிங்க செளந்தர்யா...'- கொதித்த...
ஆஸி.யின் வெற்றியை தட்டிப்பறித்த மழை! சமனில் முடிந்தது காபா டெஸ்ட்!
இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய 3-வது டெஸ்ட் போட்டியின் 5-வது நாள் மழையால் பாதிக்கப்பட்டதால் சமனில் முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 445க்கு ஆல் அவுட்டானது. நான்காவது நாள் தொடக்கத்தில் ரோஹித் ஆட்டமிழக்க கே.எல்.ராகுல் - ஜடேஜா சிறப்பாக விளையாடினர். ராகுல் 84 ரன்களுக்கும் ஜடேஜா 77 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.
ஆட்டத்தின் பல்வேறுமுறை மழை குறுக்கிட்டதால் இந்திய அணிக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. இறுதியில் பும்ரா (10)- ஆகாஷ் தீப் (27) கூட்டணி அதிரடியாக விளையாடியதால் ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டது.
252/9 ரன்களுக்கு 4ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் இன்று(டிச.18) ஆட்டம் தொடங்கியதும் 4 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
டிராவிஸ் ஹெட்டின் பந்துவீச்சில் ஆகாஷ் தீப் 31 ரன்களில்ல் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 78.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
2-வது இன்னிங்ஸில் 185 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பும்ரா - ஆகாஷ் தீப் இருவரும் பந்துவீச்சிலும் நெருக்கடி கொடுத்தனர். பும்ரா - ஆகாஷ் தீப் வேகத்தில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களில் 33 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் 8-வது விக்கெட்டுக்கு வந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் தெரிக்கவிட்டு அணியின் ஸ்கோரை கொஞ்சம் உயர்த்தினார். ஆஸ்திரேலிய அணி முடிவில் 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் கம்மின்ஸ் டிக்ளேர் செய்தார்.
அதிகபட்சமாக கம்மின்ஸ் 22 ரன்களும், அலெக்ஸ் 20 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணித் தரப்பில், பும்ரா 3 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனால், இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மோசமான வானிலையால் இந்திய அணியின் தொட்டக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி, வெற்றி அல்லது சமனில் முடித்து கொள்ளும் நிலையில் விளையாடினர்.
2.1 ஓவர்களில் மோசமான வானிலை, குறைந்த வெளிச்சத்தால் முன்னதாகவே, தேனீர் இடைவேளை விடப்பட்டது. போட்டி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமனில் முடித்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் தொடர்கிறது. மேலும், இந்திய அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கான இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் தொடர்கிறது.
இவ்விரு அணிகளும் விளையாடும் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.