முகமூடி கிழிந்தது! மதவெறிக் கட்சியிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? மமதா
5 நாள்களுக்கு பின் உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்து தொடக்கம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் போக்குவரத்து 5 நாள்களுக்கு பின் மீண்டும் புதன்கிழமை முதல் இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது .
இதையும் படிக்க |கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடக்கம்!
பருவ மழை காலங்களில் வனப்பகுதியில் ஏற்படும் மண் சரிவு காரணமாக பாறைகள் உருண்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்து வருவதால் மலை ரயில் சேவை என்பது அடிக்கடி தடைப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வகை நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் சேவை 5 நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மீண்டும் மலை ரயில் சேவை
இந்த நிலையில், 5 நாள்களுக்குப் பின் வழக்கம் போல் புதன்கிழமை காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.