3ஆவது இடத்தில் இந்தியா: டபிள்யூடிசி இறுதிப்போட்டிக்கு செல்லுமா?
Ashwin : ஓய்வு முடிவு; எமோஷ்னல் அஷ்வின், ஹக் கொடுத்த கோலி - நெகிழ்ச்சி தருணங்கள் | Video
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஷ்வின் ஓய்வை அறிவித்திருக்கிறார்.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். அஷ்வின் புகைப்படம் ஒன்றை வெளியீட்டு அவருக்கு நன்றி தெரிவித்ததோடு, “இந்தியாவின் விலைமதிப்பற்ற ஆல்ரவுண்டர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு மிகவும் நன்றி” என பிசிசிஐ நிர்வாகம் அஷ்வினின் ஓய்வு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
அஷ்வினின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, பிரிஸ்பேன் டெஸ்ட்டில் மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டிருந்த நேரம் அஷ்வின் கோலி மற்றும் பயிற்சியாளர் கம்பீருடன் பேசிக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் எமோஷனல் ஆன, அஷ்வினை விராட் கோலி ஹக் கொடுத்து தேற்றினார். இதுதொடர்பான புகைப்படங்களும், எமோஷ்னல் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.