செய்திகள் :

பாஜகவால் 272 வாக்குகளைகூட பெற முடியவில்லை! எப்படி மசோதாவை நிறைவேற்றுவார்கள்? காங்கிரஸ்

post image

பாரதிய ஜனதா கட்சியால் நேற்றைய மின்னணு வாக்கெடுப்பில் 272 வாக்குகளைகூட பெற முடியாத நிலையில், எவ்வாறு மசோதாவை நிறைவேற்ற முடியும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிப்பதற்காக முதல்முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், மசோதாவுக்கு ஆதரவாக 269(அவையின் பெரும்பான்மை 272) பேரும் எதிராக 196 பேரும் வாக்களித்தனர். அதிகமானோர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து மசோதா தாக்கல் செய்யப்படுவதாகவும், தொடர்ந்து கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்படுவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிக்க : அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்! ராகுல்காந்தி பதிலடி!

இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:

“அவர்களால் 272 வாக்குகளைகூட பெற முடியவில்லை. அடிப்படை பெரும்பான்மைகூட அவர்களுக்கு கிடையாது. அவர்களால் எப்படி மசோதாவை நிறைவேற்றும்போது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியும்.

272 உறுப்பினர்களின் ஆதரவைகூட பெறமுடியாதவர்களால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பெறுவது நடக்காத ஒன்று” என்றார்.

மேலும், அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது பற்றி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

“யார் யாரை இழிவுபடுத்துகிறார்கள் என்பது நேற்று தெளிவாகிவிட்டது. அம்பேக்ரை உள்துறை அமைச்சர் அவமதித்துள்ளார். அம்பேத்கர் பெயரை உச்சரித்ததற்கு பதிலாக கடவுள் பெயரை கூறியிருந்தால் நல்லது நடந்திருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இது அம்பேத்கரை அவமதிக்கும் செயல் அல்லாமல் வேறென்ன? பிரதமரும், உள்துறை அமைச்சரும், பாஜகவும் அம்பேத்கரை இழிவுபடுத்தி காங்கிரஸ் மீது பழி சுமத்துகிறார்கள் என்பதுதான் உண்மை” எனத் தெரிவித்தார்.

பாஜக, ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானது: கார்கே விமர்சனம்

புதுதில்லி: பாஜக-ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்ப... மேலும் பார்க்க

அம்பேத்கர் பற்றி அமித் ஷா பேசியது என்ன?

மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, மாநி... மேலும் பார்க்க

அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்! - கார்கே

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் கேஜரிவால்!

2025ல் நிகழவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மூத்த குடிமக்கள் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெவித்துள்ர். இது... மேலும் பார்க்க

புஷ்பா-2 நெரிசலில் சிக்கிய சிறுவனின் உடல்நிலை பற்றிய அதிர்ச்சித் தகவல்!

அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க திரையரங்குக்குச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான சம்பவத்தில் அவரது 9 வயது மகன் ஸ்ரீ தேஜ், மூளைச் சேதமடைந்து சிகிச்சையில் இருப்பதாகத் தகவ... மேலும் பார்க்க

அம்பேத்கர் அவமதிப்புக்கு அமித் ஷா பதில்சொல்லியே ஆக வேண்டும்: ஆம் ஆத்மி

அம்பேத்கர் குறித்து அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் கடுமையாகச் சாடியுள்ளார். நாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவைய... மேலும் பார்க்க