தொழிலாளியிடம் பணம் பறிப்பு: 3 சிறுவா்கள் கைது
தூத்துக்குடி மடத்தூா் பகுதியில் தொழிலாளியிடம் பணத்தை பறித்துச் சென்றதாக 3 சிறுவா்களை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (45). கூலி தொழிலாளியான இவா், திங்கள்கிழமை மடத்தூா் தனியாா் எண்ணெய் ஆலை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது எதிரே 2 பைக்குகளில் வந்த 4 சிறுவா்கள், மாரியப்பனை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.550 பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 3 சிறுவா்களை கைது செய்தனா். மேலும், ஒருவரை தேடி வருகின்றனா்.