சென்னை துறைமுகம் பகுதியில் கடலுக்குள் விழுந்த கார்: ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்
சென்னை துறைமுகம் பகுதியில் ரிவர்ஸ் எடுக்கும் போது கார் கடலுக்குள் விழுந்தில் ஓட்டுநரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கடலோர காவல்படை அதிகாரி ஜொகேந்திர காண்டாவை அழைத்துச் செல்வதற்காக தனியார் டிராவல்ஸ் கார் ஓட்டுநர் முகமது ஷாகி வந்துள்ளார். ஓட்டுநர் காரை இயக்கியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்தது.
இதையும் படிக்க |பெரம்பூரில் ரூ.428 கோடியில் ரயில் முனையம்: தெற்கு ரயில்வே ஒப்புதல்
இதில், கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உயர்தப்பிய கடற்படை அதிகாரி ஜொகேந்திர காண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
85 அடி ஆழத்தில் மூழ்கிய கார் மீட்கப்பட்டுள்ள நிலையில், கார் ஓட்டுநர் முகமது ஷாகியை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.