செய்திகள் :

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் புதன்கிழமை காலை பத்து மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவியது. இது, அடுத்த இரு நாள்களில் மேலும் வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதியை நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால், வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதன்கிழமை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும், விழுப்புரம், கடலூா் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து வியாழக்கிழமை (டிச. 19) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க |சென்னை துறைமுகம் பகுதியில் கடலுக்குள் விழுந்த கார்: ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்

வெள்ளிக்கிழமை (டிச. 20) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் வரும் 21 முதல் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான கனமழை பெய்யக்கூடும்.

வடதமிழக கடலோரப் பகுதி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் புதன்கிழமை தரைக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும்.

தமிழக கடலோரப் பகுதி, மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதியில் புதன் மற்றும் வியாழக்கிழமை சூறைக் காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரூப் 2, 2ஏ: சான்றிதழ்களை பதிவேற்ற இன்றே கடைசிநாள்!

குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வு மையம் மற்றும் சான்றிதழை பதிவேற்றம் செய்ய இன்று(டிச. 18) கடைசி நாளாகும்.துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலு... மேலும் பார்க்க

திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம்: அரசாணை வெளியீடு

திருச்சியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியதை அடுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.கடந்த ... மேலும் பார்க்க

சென்னை துறைமுகம் பகுதியில் கடலுக்குள் விழுந்த கார்: ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்

சென்னை துறைமுகம் பகுதியில் ரிவர்ஸ் எடுக்கும் போது கார் கடலுக்குள் விழுந்தில் ஓட்டுநரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கடலோர காவல்படை அதிகாரி ஜொகேந்... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் 2: தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் - 2 தொடர் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ளதால், மற்ற தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படுகிறது.எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

'கலைஞரின் படைப்புலகம்' நூலினை வெளியிட்டார் முதல்வர்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (17.12.2024) தலைமைச் செயலகத்தில், எழுத்தாளர் இமையம் எழுதிய “கலைஞரின் படைப்புலகம்” என்ற நூலினை வெளியிட்டார்.நூற்றாண்டு காணும் ஆளுமைகள் எனும் தலைப்பின்கீழ் புகழ்பெற்ற அரசியல... மேலும் பார்க்க

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபலத் தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் மனைவிக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்து... மேலும் பார்க்க