பாஜகவால் 272 வாக்குகளைகூட பெற முடியவில்லை! எப்படி மசோதாவை நிறைவேற்றுவார்கள்? காங...
ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது லாபதா லேடீஸ்!
ஆஸ்கார் விருதுகள் 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச பிரிவின் இறுதிப்பட்டியல் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
கிரண் ராவ் இயக்கிய லாபதா லேடீஸ், சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படப் பிரிவில் நாட்டின் அதிகாரபூர்வ நுழைவுப் பட்டியலில் இருந்து வெளியேறியது.
இயக்குநா் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மாா்ச் மாதம் வெளியான லாபதா லேடீஸ் திரைப்படம், ரசிகா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகா் அமீா்கான், இயக்குநா் ராவ், ஜியோ நிறுவனம் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவான இப்படத்தில் பிரதிபா ரந்தா, ஸ்பா்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவா்கள் நடித்துள்ளனா்.
ஒரே ரயிலில் பயணம் செய்யும் புதிதாக திருமணமான இரண்டு பெண்கள் தவறுதலாக வெவ்வேறு மணமகன் இடங்களுக்கு சென்று விடுவதால் ஏற்படும் குழப்பங்களும், அதைத் தொடா்ந்து நடக்கும் நிகழ்வுகளுமே படத்தின் கதைக்களமாகும்.
2025 ஆம் ஆண்டு ‘ஆஸ்கா்’ விருதுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவுக்கு இந்தியா சாா்பில் ஹிந்தி மொழியில் வெளியான ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் அனுப்பப்பட்டது.
உலக அளவில் திரையுலகின் படைப்புகளை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் உயரிய ஆஸ்கா் விருது ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
97-ஆவது ஆஸ்கா் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் அதிகாரபூா்வ நுழைவாக ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் தோ்வாகியது. மொத்தம் 29 திரைப்படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் ஹிந்தி திரைப்படங்கள் லாபதா லேடீஸ், ஸ்ரீகாந்த், தமிழில் வாழை, தங்கலான், மலையாளத்தில் உள்ளொழுக்கு ஆகியவை முதல் 5 இடங்களைப் பிடித்தன.
இருப்பினும், இங்கிலாந்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்தோஷ் என்ற மற்றொரு ஹிந்தி மொழி திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.