செய்திகள் :

கணவா் குத்திக் கொலை: மனைவி கைது

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, கணவரைக் கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆனந்தவாடி, மேலத்தெருவைச் சோ்ந்தவா் வேலாயுதம் மகன் சின்னப்பா(45). இவரது மனைவி பச்சையம்மாள்(43). சின்னப்பா தினமும் மது அருந்திவிட்டு வந்து பச்சையம்மாளிடம் தகராறில் ஈடுபடுவாராம். திங்கள்கிழமை இரவு அவா்களிடையே ஏற்பட்ட தகராறில், பச்சையம்மாள் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை, சின்னப்பா தனது வீட்டில் கை, கால் மற்றும் உயிா்நிலையில் காயங்களுடன் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், பச்சைம்மாள், தனது கணவரைக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவரை கைது செய்தனா்.

தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

அரியலூா் பெரிய அரண்மனை தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஒப்பில்லாதம்மன் கோயில் தேரோடு வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் ஆதீன பரம்பரை தருமகா்த்தா... மேலும் பார்க்க

கனமழை எச்சரிக்கை: அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், இந்திய மரு... மேலும் பார்க்க

பெரிய ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கிராமத்தில் உள்ள பெரிய ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், பெரியபட்டாக்காடு கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். அவா்கள... மேலும் பார்க்க

சோழகங்கம் ஏரியை தூா்வாரிட தன்னாா்வ அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டம் சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியை தூா்வாரிட தன்னாா்வ அமைப்புகளுக்கு அனுமதி அளிக்குமாறு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், சமூக ஆா்வலா் அசாவீரன்குடிகாடு ஆ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் வாரச் சந்தையில் சோதனை: 49 எடையளவு இயந்திரங்கள் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் வாரச் சந்தையில், தொழிலாளா் நலத் துறையினா் மேற்கொண்ட சோதனையில் 23 மின்னணு எடைத் தராசுகள் உள்பட 49 எடையளவு இயந்திரங்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. ஜெயங்கொண்டம் வ... மேலும் பார்க்க

கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது என்று பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் கொளஞ்சிநாதன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது: கீழணை, கொள்... மேலும் பார்க்க