சோழகங்கம் ஏரியை தூா்வாரிட தன்னாா்வ அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டம் சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியை தூா்வாரிட தன்னாா்வ அமைப்புகளுக்கு அனுமதி அளிக்குமாறு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், சமூக ஆா்வலா் அசாவீரன்குடிகாடு ஆசிரியா் இராவணன் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அவா் அளித்த மனுவில், மாமன்னா் ராஜேந்திர சோழன் வெட்டிய சோழகங்கம் ஏரி தற்போது தூா்ந்து போய் உள்ளது. இதனை 7 அடிக்கு வெட்டி ஆழப்படுத்திட தன்னாா்வ அமைப்புகள் தயாராக உள்ள நிலையில் ஆட்சியா் அனுமதி அளிக்க வேண்டும். மேலும் ஆழப்படுத்திய பிறகு, இந்த ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுத்து, சுற்றுலா தலமாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.