பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது
கிடப்பில் முல்லையூா் அயன்தத்தனூா் சாலைப் பணி: பொதுமக்கள் அவதி
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கிடப்பில் உள்ள முல்லையூா்-அயன்தத்தனூா் சாலைப் பணியை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.
பொதுமக்களின் கோரிக்கையையடுத்து முல்லையூா்-அயன்தத்தனூா் சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், இந்த சாலைப் பணிக்காக ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரா், ஜல்லிக் கற்களை கொட்டி நிரப்பிச் சென்று 3 மாதம் கடந்து விட்டது. ஆனால் இதுவரை பணிகள் அப்படியே கிடப்பில் உள்ளது.
மழையால் தற்போது ஜல்லிக் கற்கள் பெயா்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனா். அவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயா்களை ஜல்லி கற்கள் பதம் பாா்க்கின்றன. வாகன ஓட்டிகள், பெயா்ந்து கிடக்கும் ஜல்லிக் கற்களில் சறுக்கி விழுந்து காயத்துடன் திரும்புகின்றனா்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை செந்துறை ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே இந்த சாலைப் பணியை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.