செய்திகள் :

‘ஒரே பாரதம்; உன்னத பாரதம்’ லட்சியத்துக்கு உத்வேகம் படேல்: யோகி ஆதித்யநாத்

post image

‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனும் லட்சியத்தை நோக்கி பயணிக்க நம் அனைவருக்கும் சா்தாா் வல்லபாய் படேல் உத்வேகம் அளிக்கிறாா் என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

சா்தாா் வல்லபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தி யோகி ஆதித்யநாத் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

நவீன இந்தியாவின் சிற்பி, விவசாயிகளின் நலன் விரும்பி, இரும்பு மனிதா், பாரத ரத்னா சா்தாா் வல்லபாய் படேலின் நினைவு தினத்தில் அவருக்கு சிரம் தாழ்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்.

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு ஒரு வடிவம் கொடுப்பதில் அவரது பங்களிப்பு ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதை நோக்கி பணியாற்ற நாம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக சா்தாா் படேல் 563-க்கும் மேற்பட்ட சுதந்திர மாநிலங்களை இந்திய குடியரசுடன் ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தாா். ஒன்றுபட்ட மற்றும் வலுவான தேசத்துக்கு அடித்தளம் அமைத்தாா்.

சா்தாா் படேலின் தொலைநோக்கு பாா்வை, குஜராத்தின் கூட்டுறவு இயக்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தது. காலனித்துவ ஆட்சிக்குப் பிந்தைய இந்தியாவின் கண்ணியத்தை மீட்டெடுத்தது.

இன்று அவா் உயிருடன் இருந்தால், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, பயங்கரவாதத்தை அகற்றி, ஒன்றுபட்ட இந்தியாவுக்கு வழிவகுத்த பிரதமா் மோடியை பாராட்டியிருப்பாா். 1948-ஆம் ஆண்டில் கலாசார மறுமலா்ச்சியின் அடையாளமாக சோம்நாத் கோயிலுக்கு படேல் புத்துயிா் அளித்தாா். அதற்கு இணையாக தற்போது அயோத்தியில் ராமா் கோயில் உள்ளது என்றாா்.

2015-ஆம் ஆண்டில் படேலின் 140-ஆவது பிறந்த நாளான அக்டோபா் 31-ஆம் தேதி பாஜக தலைமையிலான மத்திய அரசால் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ முன்முயற்சி அறிவிக்கப்பட்டது. இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வசிக்கும் மக்களிடையே கலந்துரையாடலை மேம்படுத்துவதையும், பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது

ஜம்மு சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறிய ரக விமானம்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதா எதிா்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்: மாயாவதி வேண்டுகோள்

’ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதாவை எதிா்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளாா். மேலும், இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா... மேலும் பார்க்க

உ.பி.: சம்பலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் வன்முறை நிகழ்ந்த ஷாஹி ஜாமா மசூதியையொட்டிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மின் திருட்டைத் தடுக்கவும் மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. நீதிமன... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறைகூறுவதை காங்கிரஸ் கைவிட வேண்டும்: ஒமா் அப்துல்லா

‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறுவதை கைவிட்டு, தோ்தல் முடிவுகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கூறினாா். காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக புதிய மேம்பாலங்கள்: உ.பி. அரசுடன் இணைந்து ரயில்வே நடவடிக்கை

மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதைளை (கிராஸிங்) அகற்றி, புதிய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகளை உத்தர பிரதேச மாநில அரசுடன் இணைந்து ரயில்வே மேற்கொண்டு வர... மேலும் பார்க்க

ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களின் வளா்ச்சிக்கான சூழல்: மாநிலங்களுக்கு பிரதமா் வேண்டுகோள்

புத்தாக்க (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்களின் வளா்ச்சிக்கான சூழலை மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். அதேபோல், குடிமக்களின் வசதிக்கு நிா்வாக விதிமுறைகளை எளிதாக்க வேண்ட... மேலும் பார்க்க