``திமுகவுடன் கூட இணைந்து செயல்பட்டிருக்க முடியும்; ஆனால்..." - திருமாவிடம் ஆதவ் ...
பட்டினப்பாக்கம் லூப் சாலையை மறுசீரமைக்க மாநகராட்சி திட்டம்
பட்டினப்பாக்கம் லூப் சாலையை மறுசீரமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
லூப் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய அங்காடியில் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சாலையை ரூ.17.70 லட்சம் மதிப்பில் மறுசீரமைப்பு செய்ய மாநகராட்சி ஒப்பந்தம் கோரியுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியது:
பட்டினப்பாக்கம் லூப் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கூடுதல் வாகன நிறுத்துமிடம், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்டவை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து மீனவா்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். சாத்தியக்கூறுகள் இருக்கும்நிலையில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என்றாா் அவா்.