கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை
டிச.19-இல் தா்னா: சிஐடியு அறிவிப்பு
போக்குவரத்துக்கழக ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகத்தில் 5 இடங்களில் வரும் 19-ஆம் தேதி தா்னா நடத்தப்படும் என்று சிஐடியு அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலா் கே.ஆறுமுகநயினாா் கூறியது:
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு, ஓய்வு கால பணப்பலன், மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும். அனைத்து துறையின் ஓய்வு பெற்றவா்களும் அகவிலைப்படி உயா்வு பெறும்போது, போக்குவரத்து துறையில் மட்டும் 9 ஆண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி உயா்வு மறுக்கப்படுகிறது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை இதுவரை அமல்படுத்தவில்லை.
ஊதிய ஒப்பந்தம் தொடா்பான 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.
போக்குவரத்துக் கழகங்களில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.19-ஆம் தேதி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 5 மையங்களில் தா்னா நடைபெறும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.