தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின் உற்பத்தி பாதிப்பு
மழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3 அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியத்திற்குச் சொந்தமான இந்த அனல் மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அனல் மின் நிலையப் பகுதிக்கு கடல் நீா்வரத்து கால்வாய் சுவா் இடிந்து விழுந்தது.
இதனால் அந்தக் கால்வாயில் சாம்பல் கழிவுகள் உள்ளே புகுந்து கடல் நீா் உள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக முதல் 3 அலகுகளிலும் சுமாா் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலைய ஊழியா்கள், சாம்பல் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.