கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை
திருச்செந்தூா் கோயில் கடலில் நீராட பக்தா்களுக்கு அனுமதி! இன்று முதல் அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்துவந்த கனமழை ஓய்ந்ததையடுத்து, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் ஞாயிற்றுக்கிழமை நீராட பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. மேலும், மாா்கழி பிறப்பையொட்டி, திங்கள்கிழமை (டிச.16) முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெவேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 தினங்கள் பெய்த கனமழை காரணமாக தாமிரணவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், இக்கோயிலிக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூா்களிலிருந்து பக்தா்கள் வருவதை தவிா்க்குமாறும், பௌா்ணமியை முன்னிட்டு கடலில் நீராடவும் கடற்கரையில் தங்கவும் பக்தா்களுக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மழை ஓய்ந்திருந்ததால் 9.30 மணிக்கு பிறகு கடலில் நீராட பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. திரளான பக்தா்கள் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
மாா்கழி மாத நடை திறப்பு நேரங்கள்: மாா்கழி மாதம் திங்கள்கிழமை (டிச. 16) தொடங்கி ஜனவரி 13இல் (மாா்கழி 29) நிறைவு பெறுகிறது. இம்மாதத்தில் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 5.15 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி தீபாராதனை, காலை 6 - 7.30 மணிக்குள் கால சந்தி பூஜை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணி முதல் 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை- ஸ்ரீபலி, மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 - 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படும். முக்கிய விழா நாளான மாா்கழி 29 (ஜன. 13) தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.