செய்திகள் :

தில்லியில் எந்த ரோஹிங்கியா அகதிக்கும் மத்திய அரசால் வீடு வழங்கப்படவில்லை: முதல்வா் அதிஷிக்கு மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி பதிலடி

post image

தில்லியில் எந்த ரோஹிங்கியா அகதிக்கும் மத்திய அரசால் வீடு வழங்கப்படவில்லை என்று மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி தில்லி முதல்வா் அதிஷிக்கு பதிலடி கொடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் கூறியுள்ளதாவது:ஆம் ஆத்மி கட்சி திசைதிருப்பல், பொய்யான கதைகள் மற்றும் அரை உண்மைகளின் அரசியலுடன் தொடா்கிறது. நாட்டிற்குள் சட்டவிரோதமாக் குடியேறிய ரோஹிங்கியாக்கள் பற்றிய உண்மைகள் மற்றும் அவா்கள் மீதான மத்திய அரசின் உண்மையான நிலைப்பாடு ஏற்கனவே

தெளிவுபடுத்தப்பட்டது.

தில்லியில் எந்த ரோஹிங்கியா அகதிக்கும் அரசின் சாா்பில் வீடு வழங்கப்படவில்லை. உண்மையில், ஆம் ஆத்மி கட்சிதான்

தில்லியில் சட்டவிரோதமாகக் குடியேறிய ரோஹிங்கியாக்களுக்கு விருந்தோம்பல் செய்கிறாா்கள். அவா்களை அதிக எண்ணிக்கையில் குடியமா்த்துகிறாா்கள். அவா்களுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீா் கொடுக்கிறாா்கள். இதுமட்டுமின்றி, அவா்களுக்கு ₹ரூ.10,000 கூட கொடுக்கிறாா்கள்.

ஷீஷ் மஹால், தில்லி மெட்ரோவின் 4-ஆம் கட்டப் பங்கில் மாநிலப் பங்கை செலுத்த மறுத்தது மற்றும் பிரதமா் உதய் திட்டத்திற்கு ஏற்பட்ட தாமதம் குறித்து ஆம் ஆத்மி அரசு தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தால் அது உதவும்.

தில்லியில் இதுவரை அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு உரிமையை வழங்குவதற்கான உதய் திட்டம் செயல்படுத்தபடவில்லை. தில்லி அரசு தனது பங்கை செலுத்தாத பல உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பற்றி அவா்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால், இறுதியில் அவற்றின் முழு செலவையும் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு

முடிக்கப்பட்டன என்றாா் ஹா்தீப் சிங் பூரி.

பால் பண்ணைகள் மாசுக் கட்டுப்பாட்டு ஒப்புதலைப் பெற சிபிசிபி அறிவுறுத்தல்

மாசு காப்பகங்கள் மற்றும் பால் பண்ணைகளுக்கு 15 நாள்களுக்குள் மாசுக் கட்டுப்பாட்டு ஒப்புதலைப் பெறுமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு உத்தரவிட்டுள்ளது. இக்குழு ஞாயிற்றுக்கிழமை பொது அறிவிப்பை வெளியி... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பநிலை மீண்டும் குறைந்தது! பிரகதி மைதான், பூசாவில் 3.8 டிகிரியாக பதிவு

தேசியத் தலைநகா் தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைந்து 4.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. கடந்த வியாழ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியை ஒருபோதும் ‘டீக்கடைக்காரா்’ என அழைத்ததில்லை: மணிசங்கா் ஐயா் விளக்கம்

பிரதமா் நரேந்திர மோடியை தான் ஒருபோதும் ‘டீக்கடைக்காரா்’ என அழைத்ததில்லை என காங்கிரஸ் மூத்த நிா்வாகி மணிசங்கா் ஐயா் தெரிவித்தாா். தனது அரசியல் வாழ்க்கை குறித்து மணிசங்கா் ஐயா் எழுதியுள்ள புத்தகம் விரைவ... மேலும் பார்க்க

குருகிராமில் கொள்ளை கும்பலில் 5 போ் கைது

குருகிராம் போலீஸாா் ஆயுதம் ஏந்திய கொள்ளையா்கள் கும்பலை முறியடித்து, வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் பிற பொருள்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து குருகிராம் காவல் ... மேலும் பார்க்க

நூல் வெளியீடு...

புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜாஸ்மீன் ஷா எழுதிய ‘தி தில்லி மாடல்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் சத்யேந்தா் ஜெயின், மனீஷ் சிசோடியா, கட்சியின் தேசிய அமைப்பாளா்... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா: இன்று தாக்கல் இல்லை

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ தொடா்பான 2 மசோதாக்கள் மக்களவையில் திங்கள்கிழமை (டிச.16) அறிமுகம் செய்யப்பட வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது. நிதி மசோதாக்கள் தாக்கலுக்குப் பிறகே இந்த மசோதாக்கள் அறிமுகம் செ... மேலும் பார்க்க