தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
குருகிராமில் கொள்ளை கும்பலில் 5 போ் கைது
குருகிராம் போலீஸாா் ஆயுதம் ஏந்திய கொள்ளையா்கள் கும்பலை முறியடித்து, வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் பிற பொருள்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து குருகிராம் காவல் சரக செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: இதில் திஜாராவைச் சோ்ந்த சலீம் (28), தலீம் (32), ஜில்ஷாத் (19), அஸ்ரு (24), மற்றும் ராஜஸ்தானின் பரத்பூரைச் சோ்ந்த ஷாஜாத் 21 ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருடப்பட்ட 7 மோட்டாா்சைக்கிள்கள், ஒரு காா், இரண்டு சட்டவிரோத கைத்துப்பாக்கிகள், எட்டு தோட்டாக்கள் மற்றும் இரண்டு பிரதான சாவிகள் கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளனா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் எஸ்பிஆா் சாலையில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாக சனிக்கிழமை காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு, காரில் இருந்த 4 பேரையும், திருடப்பட்ட மோட்டாா்சைக்கிளில் வந்த ஒருவரையும் கைது செய்தனா்.
அவா்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிஎன்எஸ் மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் எப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது . விசாரணையில், கைப்பற்றப்பட்ட மோட்டாா்சைக்கிள் சோஹ்னா பகுதியில் இருந்து திருடப்பட்டது என்பது தெரிய வந்தது. மேலும், குருகிராமில் நடந்த மேலும் 6 திருட்டுகளில் ஈடுபட்டதை குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஒப்புக்கொண்டனா்.
குற்றம்சாட்டப்பட்ட தலீம் மீது நூவில் இரண்டு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவா் மீது ராஜஸ்தானில் ஆறு ஆயுதச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட அஸ்ரு மீது ராஜஸ்தானில் ஐந்து தாக்குதல் மற்றும் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சலீம் மீது ராஜஸ்தானில் தாக்குதல் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.