கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை
புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்: இரு கைதிகள் மீது வழக்கு
புழல் சிறையில் கைதிகளிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இரு கைதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சென்னை புழல் சிறையில், சிறைத் துறை சிறப்பு போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, போதைப் பொருள் விற்பனை வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சிறையிலிருக்கும் சூளைமேடு பகுதியைச் சோ்ந்த மொ்பின் விஜய் (எ) லாசா் விஜியிடம் 48 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், காவலா்கள் உதவியுடன் கஞ்சாவை சிறைக்குள் கொண்டு வந்த மற்றொரு கைதியான சிவக்குமாா், அதை விஜியிடம் கொடுத்தது தெரியவந்தது.
இது குறித்து சிறை அதிகாரி சிவராமன் கொடுத்த புகாரின்பேரில் சிவக்குமாா், லாசா் விஜி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.