செய்திகள் :

``திமுகவுடன் கூட இணைந்து செயல்பட்டிருக்க முடியும்; ஆனால்..." - திருமாவிடம் ஆதவ் சொன்னது என்ன?!

post image

கடந்த வாரம், ஒழுங்கு நடவடிக்கைக்காக ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது விசிக.

இந்த நிலையில் நேற்று, கட்சியில் இருந்து முழுவதும் விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார். இதுக்குறித்து, நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த விசிக தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "ஆதவ் அர்ஜுனா நல்ல நோக்கத்தில் தான் கட்சியில் வந்து இணைந்தார். எனக்கு எத்தனையோ கட்சியில் தொடர்பு இருந்தாலும், திமுகவில் கூட என்னால் இணைந்து செயல்பட்டிருக்க முடியும். ஆனாலும், தலித் மக்களின் நலனுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறி தான் விசிக-வில் சேர்ந்தார்.

திருமாவிடம் ஆதவ் சொன்னது என்ன?!

தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், 'என்னுடைய நியாயமான கோபங்கள், மக்கள் நலனுக்காக நான் வெளியிடும் கருத்துகள் எனக்கும், திருமாவுக்கும் இடையில் இருக்கும் உறவை பாதிப்பதாக இருக்கிறது. அதற்கு இடம் கொடுக்க விரும்பவில்லை. அதனால், விலகுகிறேன்' என்று கூறியுள்ளார்.

இடைநீக்கம் செய்தப்பிறகு அதுக்குறித்து பொதுவெளியில் கருத்து சொல்வது வழக்கமில்லை. தலைமையிடமோ, ஒழுங்கு நடவடிக்கை குழுவிடமோ அதுக்குறித்து பேசி, ஒழுங்கு நடவடிக்கை தேவையில்லை என தலைமையும், குழுவும் கருதினால், அந்த நடவடிக்கை நீக்கப்படும். இது தான், ஒவ்வொரு கட்சியிலும் நடைமுறை.

ஆதவ் அர்ஜுனா

ஆனால், இடைநீக்கம் செய்த அன்றே அவர் அறிக்கை வெளியிட்டது கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக இருந்தது. அது அவருக்கு சரியாக இருந்தாலும், கட்சியின் நடைமுறைக்கு சரியானது அல்ல.

நமக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும், நாம் பேசுவது சரியாக இருந்தாலும், மக்களுக்காக பேசுகிறோம் என்றாலும் கட்சியின் நடைமுறைப்படி இயங்குவது தான் முதலில் முக்கியம்.

அவரை நீக்கம் வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. கட்சியின் நடைமுறைக்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்பது தான் இடைநீக்கத்தின் நோக்கம்" என்று பேசினார்.

TVK Vijay: தவெக உறுப்பினர்கள் சேர்க்கை; இணைந்த மூதாட்டிகள்... வரவேற்ற இளம் நிர்வாகிகள்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி நகர, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ந... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் மூட்டுவலி வருமா?

Doctor Vikatan: என்னுடைய தோழி எடைக்குறைப்புக்காகஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தார். அதன் காரணமாக அவருக்கு மூட்டுவலிவந்துவிட்டது. மருத்துவர் ஸ்கிப்பிங்கைதவிர்க்கச் சொல்லிவிட்டதாகச்சொல்கிறார். ஸ்கிப்பிங்... மேலும் பார்க்க

Doctor Vikatan: தூக்க மாத்திரைகளுக்கு பதிலாக டிப்ரெஷனை குறைக்கும் மாத்திரைகள் எடுப்பது சரியா?

Doctor Vikatan:தூக்க மாத்திரைகளுக்குப் பதிலாக தற்போது சில மருத்துவர்கள் ஆன்டி-டிப்ரெசன்ட் (anti-depressant) மாத்திரைகள் கொடுக்கிறார்கள்... அவை நல்லையா? தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாமா?பதில் சொல்கிறார், ... மேலும் பார்க்க

Rahul Gandhi: ``துரோணர் ஏகலைவரின் கட்டை விரலை வெட்டியதுப்போல...'' - பாஜகவை சாடிய ராகுல் காந்தி

தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் குளிர் காலக் கூட்டத்தொடரில் 75 ஆண்டுக்கால இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பயணம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மத்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "எனது... மேலும் பார்க்க

கனமழை ஆய்வு: ``முடியாவிட்டால், ராஜினாமா செய்யுங்கள்!" -ஆவேசமான மக்கள்; பாதியில் கிளம்பிய அமைச்சர்!

கடந்த இரண்டு நாள்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாய் மாறியிருக்கின்றன. இதைத்தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக பேரிடர் மீட்பு படையினர் ம... மேலும் பார்க்க

South Korea: ராணுவ ஆட்சியை அறிவித்த தென் கொரியா அதிபர் பதவி நீக்கம்..!

கிட்டதட்ட 10 நாள்களுக்கு முன்பு, தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல், "எதிர்க்கட்சிகள் வட கொரியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் அரசை அதன் கடமையை செய்யவிடாமல் தடுக்கிறது. இதனால், தென் கொரியாவில் ராண... மேலும் பார்க்க