`சில்க் அறிமுகம் முதல் 1000-க்கும் மேற்பட்ட படங்கள் வரை' - வினுசக்ரவத்தியின் பிறந்த நாள் ஸ்பெஷல்!
ரஜினி, சத்யராஜ், அஜித், விஜய் என அனைத்து முன்னனி நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கும் வினு சக்ரவர்த்தியின் பிறந்த நாள் (15.12.1945) இன்று.
1945-ல் உசிலம்பட்டியில் பிறந்த வினுசக்கரவர்த்தி, சென்னையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து, காவல்துறையில் சேர்ந்தார்.
நடிப்பில் ஆர்வம் இருந்ததால், அரசுப் பணியைத் துறந்து, பல நாடகம் எழுதி அதில் நடித்திருக்கிறார்.
ரயில் பயணம் ஒன்றில் கன்னட சினிமாவின் பிரம்மா என்று கொண்டாடப்படும் புட்டன்னா கனகலை சந்தித்தார். கன்னட சினிமாவில் கதாசிரியராக தனது திரைவாழ்க்கையை தொடங்கினார்.
1979-ம் ஆண்டு சிவக்குமார், தீபா நடித்த “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” திரைப்படத்தில் ஒரு கிராமத்தானாக சிறிய வேடத்தில் தோன்றினார்.
குருசிஷ்யன், அண்ணாமலை, அருணாசலம், நாட்டாமை, மாப்பிளை கவுண்டர், அமர்க்களம், நினைத்தேன் வந்தாய், சுந்தரா டிராவல்ஸ் போன்ற வெற்றிப் படங்களில் முக்கியப் பங்காற்றியிருகிறார்.
2007-ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடித்த முனி திரைப்படம் வினுசக்கரவர்த்தியின் ஆயிரமாவது படமாகும்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், படுகா உள்ளிட்ட மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், கன்னட சினிமாவில் மட்டும் கடைசி வரை நடிக்கவே இல்லை.
குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை நடிகர்... என எல்லா கேரக்டர்களிலும் ஜொலித்தவர். இவரின் நடிப்புக்கு நிகராக இவரது குரலும் மிகப் பிரபலம்.
வினுசக்கரவர்த்தி 1976-ம் ஆண்டு எழுதிய வண்டிச்சக்கரம் படத்தில் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஸ்மிதாவை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.
குணசித்திர நடிப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்த வினுசக்கரவர்த்தி, 27.4.2017-ம் ஆண்டு உயிரிழந்தார்.