செய்திகள் :

அமெரிக்க கார் விபத்தில் ஆந்திர மாணவி பலி; 2 பேர் காயம்!

post image

விஜயவாடா; ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 26 வயது மாணவி, அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் பலியானார். அவரது இரண்டு நண்பர்கள் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் டென்னெஸ்ஸியில் வெள்ளிக்கிழமை, இவர்கள் பயணித்த கார், டிரக் மீது மோதியதில், 26 வயதே ஆன நாகஸ்ரீ வந்தனா பரிமளா, காயமடைந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பலியானார்.

அதேக் காரில் இருந்த மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வந்தனா, கடந்த 2022ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு மெம்பிஸ் பல்கலையில் முதுகலை பல்கலையில் படித்துக்கொண்டே, அதே பல்கலையில் பகுதிநேர வேலையும் செய்து வந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு, அவர் பணி முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, அவரது நண்பர்கள் இரண்டு பேர் அவரை காரில் அழைத்து வரும்போது இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவிலிருந்து வந்தனாவின் உடலை இந்தியா கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

ரஷியாவுக்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

அடுத்தாண்டு முதல் விசா இல்லாமல் இந்தியர்கள் பயணம் செய்ய ரஷியா அனுமதிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, கடந்த ஜூன் மாதம் விசா இல்லாத சுற்றுலா பரிமாற்றங்களை செயல்படுத்துவது குறித்து இரு நாட்ட... மேலும் பார்க்க

இன்று பூமியை கடந்து செல்லும் விமான அளவுள்ள விண்கற்கள்! ஆபத்தா?

மிகப்பெரிய அதாவது ஒரு விமானம் அளவுள்ள இரண்டு விண்கற்கள் பூமியை நோக்கி டிசம்பர் 16ஆம் தேதி வந்துகொண்டிருப்பதாகவும், இதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.எனினும் தொடர்ந்து விண்கற்கள... மேலும் பார்க்க

நடிகா் ராஜ் கபூரின் 100-ஆவது பிறந்தநாள் விழா: பாகிஸ்தானில் கோலாகல கொண்டாட்டம்

பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான ராஜ் கபூரின் 100-ஆவது பிறந்தநாள் விழாவை பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பாரம்பரியமிக்க கபூா் இல்லத்தில் கலாசார ஆா்வலா்கள் மற்றும் திரைப்பட ரசிகா்கள் சனிக்கிழமை கொண்டாட... மேலும் பார்க்க

மயோட்டை தாக்கிய ‘சீடோ’ புயல்: 14 போ் உயிரிழப்பு

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பிரான்ஸ் பிராந்தியமான மயோட்டில் ‘சீடோ’ புயலால் ஏற்பட்ட கனமழையில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா். கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான சேதங்களை சீடோ புயல்... மேலும் பார்க்க

சிரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க ஐ.நா. தூதா் வலியுறுத்தல்

சிரியா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் நீக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டுக்கான ஐ.நா. தூதா் கியொ் பெடா்சன் வலியுறுத்தினாா். கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரில், ரஷ... மேலும் பார்க்க

ஹசீனா ஆட்சியில் 3,500 போ் மாயம்: வங்கதேச விசாரணை ஆணையம் அறிக்கை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியில் 3,500-க்கும் மேற்பட்டோா் வலுக்கட்டாயமாக கைது அல்லது கடத்தல் போன்ற சம்பவங்களால் மாயமானதாக விசாரணை ஆணையம் சமா்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹசீ... மேலும் பார்க்க