செய்திகள் :

4 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (16-12-2024) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

16-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17-12-2024; செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

18-12-2024; சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

19-12-2024: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான - கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: வருவாய்த் துறை செயலராக உள்ள அமுதா உள்பட தமிழகத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வரும் 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசில்... மேலும் பார்க்க

நாட்டிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு: மின் வாரியம்

சென்னை: நாட்டிலேயே மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என்று தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.மின் கட்டணம் குறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டிருக்கும் குறிப்பில், ... மேலும் பார்க்க

சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி!

சென்னையில் நாளை முதல் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை மு... மேலும் பார்க்க

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க ஆளுநர் ஒப்புதல்!

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, மாநிலத்துக்கென தனி ஆணையத்தை அமைக்கும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு வ... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிப்பா? ஜீயர் விளக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டதாகச் சர்ச்சை வெளியான நிலையில், ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் விளக்கம் அளித்துள்ளார்.ஆடிப்பூர கொட்டகையில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட... மேலும் பார்க்க