செய்திகள் :

நாட்டிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு: மின் வாரியம்

post image

சென்னை: நாட்டிலேயே மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என்று தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் குறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டிருக்கும் குறிப்பில், 2023 மார்ச் மாத கட்டண விகிதங்களின்படி 100 யூனிட் மின்சாரத்திற்கு அனைத்து வரிகள் உட்பட மும்பையில் ரூ.643, இராஜஸ்தானில் ரூ.833, மத்திய பிரதேசத்தில் ரூ.618, உத்திர பிரதேசத்தில் ரூ.693, பீகாரில் ரூ.689, மராட்டியத்தில் ரூ.668 ஆனால், தமிழ்நாட்டில் ரூ.113 மட்டுமே.

வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில்தான் மிகமிகக் குறைவாக உள்ளது. மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வரி குறித்த சராசரி குறித்து 2023 மார்ச் நிலையில் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அரவிந்த் வாரியர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணங்களை ஒப்பிட்டுப்பார்த்தால் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் வீட்டு உபயோக மின்கட்டணம் வேறு எந்த ஒரு மாநிலத்தையும்விட மிகமிகக் குறைவாக உள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.

துபையிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 1.7 கிலோ தங்கம்: விமான ஊழியர் உள்பட இருவர் கைது!

சென்னை: துபையிலிருந்து ரூ.1.4 கோடி மதிப்புடைய 1.7 கிலோ தங்கத்தை, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னைக்கு கடத்தி வந்த சம்பவத்தில், விமான ஊழியர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தங்கம் கடத்தி வந... மேலும் பார்க்க

பாராட்டா? பரிதவிப்பா? மின் கம்பியில் ஏறி மரக்கிளையை வெட்டிய மின் ஊழியர்!

நெல்லை மாவட்டத்தில், கடுமையான மழை, வெள்ளம் பாதித்த போது, மின் கம்பியில் மரக்கிளை உரசியதால், அந்த கம்பி மீதே ஏறிச் சென்று மின் ஊழியர் கிளையை வெட்டிய சம்பவம் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: வருவாய்த் துறை செயலராக உள்ள அமுதா உள்பட தமிழகத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வரும் 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசில்... மேலும் பார்க்க

சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி!

சென்னையில் நாளை முதல் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை மு... மேலும் பார்க்க

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க ஆளுநர் ஒப்புதல்!

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, மாநிலத்துக்கென தனி ஆணையத்தை அமைக்கும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்... மேலும் பார்க்க

4 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக... மேலும் பார்க்க