மதுரை: சமையல் சூப்பர் ஸ்டார் கோலாகலம்; மூன்று இடங்களை பிடித்த நளன் பேத்திகள்!
Viduthalai 2 : `என்கிட்ட 3 கதை சொல்லியிருக்காரு, ஆனால்...' - வெற்றிமாறன் குறித்து விஜய் சேதுபதி
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள 'விடுதலை- 2' வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் சினிமா விகடனுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில் விஜய் சேதுபதி வெற்றிமாறன் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். "எனக்கு 'அசுரன்' கதையும் வெற்றிமாறன் சார் சொல்லியிருந்தார். 'வடசென்னை' கதையும் சொல்லியிருந்தார். வடசென்னை கதைதான் முதன் முதலில் நான் கேட்டு ஒருத்தரால் எப்படி இந்த மாதிரி கதையை சொல்ல முடியும் என்று வியந்தேன். ஏன்னென்றால் நாங்கள் நிறைய பேரிடம் கதையைக் கேட்கிறோம்.
அதெல்லாம் ஒரு அனுபவம். சில பேர் ஆச்சரியப்படுத்துவார்கள். சில சமயங்களில் கதைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆனால் வெற்றி சார் கதையோட டென்ஷனையும், விறுவிறுப்பையும் சொல்லும்போது அது நமக்கு விஷுவலாகவே தெரியும். எனக்கு ராஜன் கதாபாத்திரம் சொல்லும்போது அந்த கொலையோட விஷுவல் எனக்கு வந்தது. 'வடசென்னை' கதை சொல்லும்போது ஒரு ப்ளோ சார்ட்ல சொல்லி முடிச்சுட்டாரு. அவரின் கதை சொல்லும் திறன் ரொம்ப ஆச்சரியமாக இருக்கும்.
இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது என்னிடம் இன்னும் 3 கதைகள் சொன்னார். அந்த 3 கதைகள் எனக்கு இல்லை. மற்ற ஹீரோக்களை வைத்து எடுக்கப் போகிறார். அவர் கதை சொல்கிறதை கேட்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்கும். கதை சொல்வதை வைத்தே ஒரு இயக்குநர் ஒரு காட்சியை எப்படி பார்க்கிறார்.
மக்களுக்கு அதை எப்படி காட்சிபடுத்துவார் என்பது நமக்கு தெரிந்துவிடும். என்னைப் பொறுத்தவரை வெற்றி சார் படம் பார்க்கிறவர்களுக்கு போர் அடிக்காமல் எப்படி கதையை எடுத்து செல்வது என்ற விஷயத்தை தேடிக்கொண்டே இருக்கிறார்" என்று வெற்றிமாறன் குறித்து விஜய் சேதுபதி நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...