தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: இலங்கை அதிபரிடம் முதல்வர் கோரிக்கை!
சச்சினின் பேட்டிங்கை நினைவில் கொள்ளுங்கள்: விராட் கோலிக்கு கவாஸ்கர் அறிவுரை!
சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்கை நினைவில் கொள்ளுங்கள் என்று விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருக்கு கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இவ்விரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் இருக்கிறது.
3ஆம் நாள் ஆட்டத்தை திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர்: ஆப்கன் அணி அறிவிப்பு!
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. விராட் கோலிக்கு அவுட் சைட் ஆஃப்பாக 7-வது ஸ்டெம்பில் போடப்பட்ட பந்தை கவர் டிரைவ் அடிக்க முயன்று விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார். இதே முறையில் விராட் கோலி அவுட் ஆவது 12-வது முறையாகும்.
2004 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 241 ரன்கள் விளாசினார். அந்த ஆட்டத்தை விராட் கோலி நினைவுப் படுத்தி பார்க்க வேண்டும் என்றும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தத் தொடரில் இதுவரை 5, 100*, 7, 11 மற்றும் 3 ரன்கள் எடுத்துள்ளார் விராட் கோலி.
வெற்றிப் பாதையில் நியூஸி.! இங்கிலாந்துக்கு 658 ரன்கள் இலக்கு!
இதுபற்றி கவாஸ்கர் கூறுகையில், “436 பந்துகளில் 33 பவுண்டரிகள் உள்பட 241 ரன்களுடன் ஆஸ்திரேலிய அணிக்கு தனது பாணியில் பதிலளித்த ‘தனது ஹீரோ’ டெண்டுல்கரை விராட் கோலி நினைவில் கொள்ளவேண்டும். 2003-2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அவரும் (சச்சின் டெண்டுல்கர்) இதேபோன்ற ஒரு கட்டத்தில் சிக்கிக்கொண்டார். அந்தப் போட்டியில் 10 மணி நேரத்திற்கும் மேலாக பேட்டிங் செய்த டெண்டுல்கரின் ஆட்டம், அவரது சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
டெண்டுல்கர் கவர் டிரைவ் ஷாட்களை ஆடவே இல்லை. அவர் பெரும்பாலான ரன்களை ஆன்-சைடில் அடித்தார். அவர் ஆஃப்-சைடில் எந்தவொரு கவர் டிரைவ் ஷாட்டையும் ஆடவில்லை. அதற்கு முன் அவர் கவர் டிரைவ் ஷாட்களை விளையாட முயற்சித்த போது அவுட் ஆக்கப்பட்டார்.
அவர் விளையாடிய ஷாட்கள் நேராக அல்லது ஆன்-சைடில் இருந்தன. டெண்டுல்கரைப் போலவே மற்ற வகையில் ரன் குவிக்கும் திறன்களை விராட் கோலி கண்டுபிடித்து விளையாட வேண்டும். அதேபோல், கோலி தனது மனதையும் விளையாட்டையும் கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.